ஏங்கிய நாட்கள், எமக்கு பின்னர் திருமணம் முடித்த நண்பர்கள், சொந்தங்களின் பிள்ளைகளை கண்டு உள்ளே அழுது கொண்டு வெளியே சிரித்த சந்தர்ப்பங்கள்.
இன்று நினைக்கும் போது பாலைவனத்தில் ஒட்டகத்தை தொலைத்துவிட்டு நிர்க்கதியாகி மீண்டும் அவ்வொட்டகம் கிடைத்ததும் யாஅல்லாஹ்! நீ எனக்கு அடிமை என்று சந்தோஷம் கொண்டாடிய அந்த மனிதனின் அதே உணர்வு.
இந்த விடயத்தில் என்னை விட உடலாலும் உள்ளத்தாலும் அதிகமதிகம் பாதிக்கப்பட்டவள் என் மனைவியே. சந்தோஷத்தில் பங்கு கொள்ளும் உறவுகள் துக்கத்தில் பங்கு கொள்வதில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டவள்.
முதல் தடவை கருக்கலைந்த நேரத்தில் அவள் பட்ட துன்பங்களும் ஏக்கங்களும் ஒரு கணவன் என்ற முறையில் என்னால் கூட தாங்கமுடியாதவை.
பிள்ளை பெற்ற பின் எனது பிள்ளையை சுமந்தவள் என்பதற்கு மேலாக அவளும் ஒரு தாய் என்ற மரியாதை தான் அதிகமாயிருக்கிறது.
எத்தனை டாக்டர்கள், எத்தனை மருந்துகள் இவை அனைத்தும் செய்யாத , ஒரு விடயத்தை நான் செய்ய மறந்த விடயத்தை எனது தந்தை தான் நினைவூட்டினார். அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!
அது தான் அல்லாஹ் நூஹ் நபியின் கூட்டத்துக்கு கூறிய உபதேசம் =
اسغفروا ربكم انه كان غفارا. يرسل السماء عليكم مدرارا. ويمددكم باموال وبنين.
உங்களுடைய ரப்பிடம் பாவமன்னிப்பு கோருங்கள். அவன் மன்னிப்பாளன். அப்படி நீங்கள் பாவ மன்னிப்பு கோரினால் அவன் வானத்திலிருந்து மழையை இறக்கித்தருவான். மேலும் செல்வம் பிள்ளைகள் போன்றவற்றை தந்து உங்களுக்கு உதவி செய்வான்.
ஒரு மாதம் தொடர்ந்து தஹஜ்ஜத் தொழுது விட்டு அதிகமாக இஸ்திபார் செய்தோம்.
رب اغفرلي وتب علي انك انت التواب الرحيم
என்று அடிக்கடி வேண்டினோம் அல்லாஹ்வின் உதவி எம்மையும் தேடி வந்தது.
இன்று முழு நிலவாக கைகளில் தவழ்கிறது.
பிள்ளை பேறு இல்லை என்று யாரும் மனமுடைந்து விடாதீர்கள். வைத்தியர்களிடம் முயற்சி செய்யுங்கள் அதைவிட பன்மடங்கு படைத்தவனிடம் முயற்சி செய்யுங்கள்.
யாராவது ஒருவருக்காவது பிரயோஜனப்படும் என்றே இதை எழுதுகின்றேன்.
அனைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு பாவமன்னிப்பு கோருதலே.
- முகம்மத் ஹுஸ்னி ( அபூஅய்லா)
Post a Comment