வண்டியில் உள்ள அனைவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல் நடிப்பார்கள் அந்த ட்ரைவரும் கூட்டு களவானியாகத்தான் இருப்பான்.
பின்பு வண்டியில் உங்கள் பின் சீட்டில் உட்காந்து இருப்பவர் உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள். உங்களுக்கு அரபி தெரிகிறதா இல்லை அரபு நாட்டுக்கு புதியவரா என தெரிந்து கொள்ள பேச்சு கொடுப்பார்கள் அரபி தெரியரில்லை சவுதிக்கு புதுசு என்று தெரிந்து விட்டால் போதும் உங்கள் கதி அதோகதிதான்.
பிறகு முன் சீட்டில் உட்காந்து இருப்பவர் அவர் இடம் வந்து விட்டது என இறங்குவார் அவர் இறங்கும் பொழுது அவரை அறியாமல் காரின் உள் பணம் விழும் அது ஒரு நாடகம்.
பிறகு உங்கள் பின் உங்களுடன் அமர்ந்து இருப்பவர் அதை எடுத்து கொள்வார் பிறகு உங்களிடம் சொல்வார் நீ இதை சொல்லி விட வேண்டாம் யாரிடமும் என கூறுவார்.
நாம் இருவரும் இந்த பணத்தை பிரித்து கொள்ளலாம் என பிறகு இறங்கி அவர் அந்த வண்டியை நோக்கி ஓடி வந்து என் பணம் காரில் விழுந்து விட்டது என டிரைவரிடம் முறை இடுவார். டிரைவர் பின் சீட்டில் உள்ள இருவரையும் சோதனை இடுவார் பணம் பின்னாடி கொடுத்து விடுவான்.
உடனே அவன் பணம் குறைகிறது என கூறி இவனிடம் தான் உள்ளது என உங்கள் மீது பலி போடுவான் பணம் இல்லை என்று சொன்னால் கையில் உள்ள செல் போன் பணம் எல்லா வற்றையும் புடிங்கி கொள்வார்கள்.
சூடானி எமனி மக்ரபி போன்றவர்கள் டாக்சியில் ஏறும்பொழுது கவனமாக இருக்கவும் முடிந்தளவு அவர்கள் டாக்சியில் ஏறுவதை தவிர்த்து கொள்ளவும்.
பெரும்பாலும் அஜினபிகளை குறி வைத்து இந்த திருட்டு கும்பல் வழிப்பறி செய்கிறது. எனக்கு தெரிந்து இதுவரை பல பேர் ஏமாந்து உள்ளார்கள். இது போல் அதிகமாக சேர் செய்யுங்கள்
புதிதாக வருபவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்
Post a Comment