smile picker smile picker Author
Title: காதலி கொண்டு வந்த விஷம்..!! 634 முறை கொலை சதியிலிருந்து உயிர் தப்பிய பிடல் காஸ்ட்ரோ. ...
Author: smile picker
Rating 5 of 5 Des:
அமெரிக்க ராஜ்ஜியம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாமல் கியூபா நாட்டின் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ. 1959 முதல் ...

அமெரிக்க ராஜ்ஜியம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாமல் கியூபா நாட்டின் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ.
1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
ஆனால், இந்த காலகட்டங்களில் அவர் அவருக்கு அமெரிக்காவுக்கு ஆதரவாக ஒருபோதும் நடந்ததில்லை.
கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் பெரும்பாலானவை அமெரிக்க பணக்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அனைத்தையும் பொதுவுடைமையாக காஸ்ட்ரோ அறிவித்தார்.
அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா, கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.
இதனால், அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது.
காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சிஐஏக்கு உத்தரவிட்டது. 634 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயன்று அமெரிக்கா தோல்வியை தழுவியது.
விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன.
கொல்ல முயன்ற காதலி
காஸ்ட்ரோவின் முன்னால் காதலி மரிடா லாரன்சை வைத்து கொலை செய்யும் முயற்சியில் அமெரிக்க உளவு நிறுவனம் முயற்சி செய்தது.
அப்போது, உடல் வறட்சியை போக்க தடவும் பசையில் விஷம் கலந்து எடுத்துச் சென்றார் மரிடா. அதனை அறிந்த காஸ்ட்ரோ தன் கையில் இருந்த துப்பாக்கியை மரிடாவிடம் கொடுத்து, ‘விஷம் கலந்து என்னை கொல்ல முயற்சிப்பதை விட இந்த துப்பாக்கியால் என்னை கொன்றுவிடு’ என்று கூறினாராம்.
இதனை கேட்டு மரிடா மனம் கலங்கி கண்ணீர் விட்டுள்ளார். தன்னை கொலை செய்ய நடந்த முயற்சிகள் குறித்து காஸ்டோரா ஒருமுறை கூறியதாவது,
’கொலை முயற்சிகளில் தப்பிப்பது ஒலிம்பிக் விளையாட்டாக இருந்திருந்தால் எனக்குதான் அதிக முறை தங்கப்பதக்கம் கிடைத்திருக்கும்’ என்று கூறியுள்ளார்.

Advertisement

Post a Comment

 
Top