smile picker smile picker Author
Title: சவுதியின் அதிரடி அறிவிப்பு..! விபரங்கள் உள்ளே...
Author: smile picker
Rating 5 of 5 Des:
வணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு தடை விதித்தும், வணிக வளாகங்களில் உள்நாட்டினரை பணியில் அமர்த்தவும் சவுதிஅரேபிய அரசு அதிரடி...

வணிக வளாகங்களில் வெளிநாட்டினர் பணிபுரிவதற்கு தடை விதித்தும், வணிக வளாகங்களில் உள்நாட்டினரை பணியில் அமர்த்தவும் சவுதிஅரேபிய அரசு அதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

சவுதிஅரேபியாவில் ஏற்பட்டு வரும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்காக, அந்நாட்டு மக்களுக்கு புதிதாக 35 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சவுதிஅரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும் நாட்டின் எண்ணை வளத்தை மட்டுமே நம்பாமல், வணிக ரீதியிலான உள்நாட்டு பொருளாதார வளத்தை பெருக்குவதற்கு உள்ளுர்வாசிகளை வணிக நடவடிக்கையில் ஈடுபடுத்தும் திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் வகுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.  
அத்தோடு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்க்கு சவுதி இளவரசர் மொஹமட் பின் சல்மான் வகுத்துள்ள திட்டத்தின் பிரகாரம், வேலையின்றிருக்கும் சவுதி அரேபியர்களுக்கு உள்நாட்டு வணிக வளாகங்களில் வேலைவாய்ப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அந்நாட்டு வணிக வளாகங்களில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்தவும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Post a Comment

 
Top