smile picker smile picker Author
Title: பச்சை இலைகளை உண்டு 25 வருடங்களாக வாழும் அபூர்வ மனிதன்..! (படங்கள் இணைப்பு)
Author: smile picker
Rating 5 of 5 Des:
25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர். பாகிஸ்தானி...

25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு வடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்டமில்லை என மெகமூத் பட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது தினமும் 1200 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர் சமைத்த உணவுகள் மீது நாட்டமின்றி பனியன், தலி மற்றும் சக் சங்கிலி போன்ற மரங்களை உண்டு வாழ்வதும், எந்தவொரு நோய் காரணமாக வைத்தியரை அணுகுவதை தாம் கண்டதில்லை என மெகமூத் பட்டின் அயலவர்கள் வியப்புற தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Advertisement

Post a Comment

 
Top