smile picker smile picker Author
Title: கணவன் மற்றும் கள்ளக்காதலிக்கு மனைவி வழங்கிய மறக்கமுடியாத உணவு!! (இப்படியும் ஒரு மனைவியா)
Author: smile picker
Rating 5 of 5 Des:
கள்ளக்காதலியை தேடிச்சென்ற கணவனை சிறையில் இருந்து விடுவித்து 4 இலட்சம் செலுத்தி அழகு கலை நிலையமொன்றிற்கு அழைத்துச்சென்று முடி மற்றும் த...

கள்ளக்காதலியை தேடிச்சென்ற கணவனை சிறையில் இருந்து விடுவித்து 4 இலட்சம் செலுத்தி அழகு கலை நிலையமொன்றிற்கு அழைத்துச்சென்று முடி மற்றும் தாடியை வெட்டி மறக்கமுடியாத பாடமொன்றை கற்பித்த பெண்ணொருவர் தொடர்பில் கல்கமுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

தனது கணவர் கள்ளக்காதலியுடன் சென்றுள்ளதை தொடர்ந்து , அவரது மனைவியால் விவாகரத்து வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் , குறித்த வழக்குடன் தொடர்புடைய பராமரிப்பு கட்டணத்தை செலுத்த தவறிய கணவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் முதலில் திருமணம் செய்துக் கொண்ட பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் , கள்ளத்தொடர்பொன்றை பேணி வந்த அந்த நபர் அந்த பெண்ணுடன் வேறொரு பிரதேசத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து முதலாவது மனைவியால் கல்கமுவ நீதிமன்றில் விவாகரத்து வழக்கு தொடரப்பட்ட நிலையில் , அவர் மாதாந்த பராமரிப்பு கட்டணமொன்றை கோரியுள்ளார்.

4 வருடங்களாக குறித்த நபர் அந்த தொகையை செலுத்த தவறியுள்ள நிலையில் , காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நான்கு வருடங்களாக குறித்த தொகையை செலுத்தாததால் , செலுத்தப்படவிருந்த சுமார் நான்கு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவிற்கு பதிலாக 4 இலட்சம் ரூபாவை செலுத்துமாறு நீதிமன்றம் அந்த நபருக்கு உத்தரவிட்டுள்ளது

இந்நிலையில் , முதலாவது மனைவியால் கள்ளக்காதலியான இரண்டாவது மனைவிக்கு தொலைப்பேசி அழைப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்போது , தனக்கு குடும்பத்தில் தகராறை ஏற்படுத்த அவசியமில்லை என தெரிவித்த முதலாவது மனைவி , கணவரை விடுவிக்க நீதிமன்றத்தில் வைத்து குறித்த 4 இலட்சத்தை தனக்கு தருமாறு கோரியுள்ளார், தான் அந்த பணத்தை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வௌியில் வந்தவுடன் மீண்டும் தருவதாக உறுதியளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து , கடந்த ஏப்ரல் 6ம் திகதி கல்கமுவ நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது , இரண்டாவது மனைவியால் வட்டிக்கு பெறப்பட்ட குறித்த 4 இலட்சம் ரூபா முதல் மனைவிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பணத்தினை பெற்றுக்கொண்ட முதல் மனைவில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வௌியில் வந்தவுடன் குறித்த தொகையை மீண்டும் கணவரின் இரண்டாவது மனைவியிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , தனது கணவரை அழகு கலை நிலையமொன்றிற்கு அழைத்துச்சென்று முடி மற்றும் தாடியை வெட்ட வைத்துள்ளதை தொடர்ந்து அவரின் இரண்டாவது மனைவி மற்றும் இரண்டாவது மனைவியின் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு உணவகமொன்றிற்கு அழைத்துச்சென்றுள்ளார்.

அங்கு மதிய நேர உணவினை பெற்றுக்கொடுத்துள்ள குறித்த பெண் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கி அனுப்பிவைத்துள்ளார்.

பின்னர் குறித்த பெண் தனது சோகக்கதையை கண்ணீர் மல்க அவரது சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Post a Comment

 
Top