smile picker smile picker Author
Title: இலங்கையர்கள் அனைவரும் இனி இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறலாம்..!
Author: smile picker
Rating 5 of 5 Des:
இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்...
இணையத்தின் மூலம் விண்ணப்பித்து கடவுச் சீட்டுக்களை பெறும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களம் செயற்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.
இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், இணையவழி விண்ணப்ப சமர்ப்பிப்புகளை மேற்கொண்டு கடவுசீட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையாக இணையத்தின் மூலம் கடவுசீட்டு பெறும் திட்டம் நடைமுறை படுத்தப்படவுள்ளது.
மேலும் குறித்த திட்டத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாகவும், திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக கடவுச் சீட்டுக்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை இணையத்தின் மூலம் அனுப்பி வைக்கும் வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு குறித்த சேவையை பெறுவதற்கான கொடுப்பனவுகளை கடனட்டைகள் மூலம் வழங்க கூடியதாகவும், இவ் வருட இறுதிக்குள் குறித்த செயற்திட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக, குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Post a Comment

 
Top