smile picker smile picker Author
Title: வாயில் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய மெஸ்சி (படங்கள் இணைப்பு)
Author: smile picker
Rating 5 of 5 Des:
ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான காயத்துடன் விளையாடிய மெஸ்சி, இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்கா...

ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான காயத்துடன் விளையாடிய மெஸ்சி, இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்.
பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் மெஸ்சி. நேற்றி நள்ளிரவு எல் கிளாசிகோ எனப்படும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

போட்டியின் 20-வது நிமிடத்தில் பந்தை எடுக்க மெஸ்சியும், ரியல் மாட்ரிட் அணியின் மார்சிலோவும் போட்டி போடுகையில் மார்சிலோனாவின் முழங்கை மெஸ்சியின் வாயில் பலமாக தாக்கியது. இதனால் மெஸ்சியின் வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.

இதற்காக கொஞ்சம் கூட அஞ்சாமல் வாயின் மருதுடன் கூடிய துணையை வைத்துக் கொண்டு தன்னுடைய ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் பயனாக 33-வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார்.
பின்னர் 92-வது நிமிடத்தில் தனது வரலாற்று சாதனைமிக்க கோலை அடித்து பார்சிலோனா அணியை வெற்றி பெற வைத்தார்.
2-வது அடித்த கோல் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி அடிக்கும் 500-வது கோலாகும்.
மெஸ்சி பார்சிலோனா அணிக்காக கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Post a Comment

 
Top