நீதிமன்றத்தை அவமதிப்பு செய்த சிங்கலே அமைப்பின் சாலிய ரனவக்கவை கைது செய்ய முடியும் என்றால் மட்டக்களப்பில் பட்டப்படகலில் நீதிமன்றஉத்தரவை நடுரோட்டில் கிழித்தெரிந்த ஞானசார தேரரை ஏன் கைது செய்ய முடியவில்லை என பானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ்நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிபிடப்பட்டுள்ளதாவது..
நேற்று முந்தினம் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததாக சிங்கலே அமைப்பின் சாலிய ரனவக்கவை பொலிஸார் கைதுசெய்யதுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் அவரை மன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர்.இந்த விடயத்தை நாம் வரவேற்கின்றோம்.
ஆனால் முஸ்லிம் வாக்குகளை மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்து திருப்பிய அலுத்கமை கலவரம் தொடர்பில் 100 க்கும் அதிகமான முறைப்பாடுகள்உள்ளன.ஞானசார தேரருக்கு எதிராகவும் அதிகமான முறைப்படுகள் உள்ளன.அவை தொடர்பில் எந்த விசாரனையும் இதுவரை இடம்பெறவில்லை கடந்தநாட்களில் பாராளுமன்ற அமர்வில் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அலுத்கமைக்கு இழப்பீடு மற்றுமல்ல நீதியையும் பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கைமுன்வைத்தார்.இழப்பீடு தொடர்பில் வாய் திறந்த ரனில் விகரமசிங்க நீதியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் வாய் திறக்கவில்லை.
அலுத்கமை கலவரம் ஒருபுறம் இருக்க இந்த நல்லாட்சியிலும் கூட ஞானசார தேரர் பல முறைகள் முருங்கை மரம் ஏறினார். அதற்க்கு எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஞானசார தேரர் பொலிஸ் அதிகாரிகள் முன்னால் வைத்துக்கொண்டு நீதிமன்றஉத்தரவை கிழித்து எறிந்தார்.அடுத்த நாள் அவரை ஜனாதிபதி அவரது செயலகத்துக்கு அழைத்து வி ஐ.பி ஆசனத்தில் அமர்த்தி அவருக்கு விருந்துகொடுத்திருந்தார்.இதுவே இவர்கள் செய்யும் நல்லாட்சி.
இன்று முஸ்லிம்கள் நால்லாட்சி மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.ஞானசார தேரர் நல்லாட்சியின் அட்டியாள் என்பதும் மஹிந்தவை ஆட்சியில் இருந்துஅகற்ற சம்பிக்க ராஜித ரனில் ஆகியோர் ஏவிவிட்ட பேர் என்பது இப்போது மக்களுக்கு தெளிவாகியுள்ளது.
நாம் கூறுவது பொய் என்றால் அலுத்கமைக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதோடு மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவை நடுரோட்டில் கிழித்தெரிந்த ஞானசாரதேரரை முடியும் என்றால் கைது செய்துகாட்ட வேண்டும் என அவர் நல்லாட்சிக்கு சவால் விடுத்துள்ளார்.
Post a Comment