குப்பை முகாமைத்துவம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
குப்பையை நீக்கிக் கொள்வது அத்தியாவசிய சேவையாக மாற்றிக் கொள்வதற்கான வர்த்தமானி அனுமதி பெற்றுக் கொள்வதற்காக விசேட நாடாளுமன்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது, மீதொட்டமுல்ல குப்பை மேடு தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றது. 6 மாதங்களுக்குள் மீதொட்டமுல்ல குப்பை மேடு அகற்றப்படாதென விவாதங்களின் போது தெரியவந்துள்ளது.
மீதொட்டமுல்லவில் தொடர்ந்து குப்பை கொட்டப்படும் என விவாதத்தில் இணைந்த கொண்ட அமைச்சர் பைஸர் முஸ்தப்பா, தெரிவித்துள்ளார்.
குப்பை கொட்டுவதற்கான வேறொரு இடம் அடையாளம் காணப்படும் வரை, மீதொட்டமுல்லையில் குப்பைகள் கொட்டப்படும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் துறைமுக நகர குப்பைகளை கொண்டு மின்சாரம் தயாரிப்பது தொடர்பிலும் விவாதத்தின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தொடரும் வறட்சி காரணமாக நீர்நிலைகள் வற்றியுள்ளன. இதன்காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் மின்விநியோகம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாறான புதிய முயற்சி மூலம் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுமாயின் அது நாட்டுக்கு சாதகமான நிலைப்பாடு என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Post a Comment