smile picker smile picker Author
Title: குர்ஆன் பிரதியை தேரருக்கு அன்பளிப்பாக வழங்கிய சுபியான் மௌலவி (PHOTOS)
Author: smile picker
Rating 5 of 5 Des:
பாறுக் ஷிஹான் இனங்களுக்கிடையில் வேற்றுமையினை இல்லாது ஒழிக்க     நாட்டில் இன ரீதியான ஐக்கியத்தினை வலுப்படுத்த  ஐனாதிபதி மைத்திரிப...
பாறுக் ஷிஹான்


இனங்களுக்கிடையில் வேற்றுமையினை இல்லாது ஒழிக்க     நாட்டில் இன ரீதியான ஐக்கியத்தினை வலுப்படுத்த  ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மிக முக்கிய கவனம் செலுத்துகின்றார் என   கலாநிதி இம்பான தம்பால மஹாநாயக்க தேரர் தெரிவித்தார்.

இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்னும் கருப்பொருளினை அடிப்படையாக முன்வைத்து   ஐனாதிபதியின்   தூரநோக்கு சிந்தனையை  வலுப்படுத்தும் முகமாக  சர்வமத அமைப்பின் பிரதிநிதிகளுடனான  சந்திப்பு ஒன்று நேற்று (28)  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

 இதன் போது  யாழ் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ தேசிய ஞானசம்பந்த பிரமச்சாரிகள் சுவாமி  யாழ் மறை மாவட்ட ஆயர் ஐஸ்டின் ஞானப் பிரகாசம் ஆகியோர்களை சந்தித்த பின்னர் யாழ் கிளிநொச்சி மாவட்ட  உலமா சபை  தலைவர் மௌலவி பி எஸ் சுபியானை   மக்கள் பணிமனையில் வைத்து கலாநிதி இம்பான தம்பால மஹாநாயக்க தேரர் குழுவினர் சந்தித்தனர்.

இச்  சந்திப்பில் முஸ்லீம்  மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் தற்போதைய சமகால பிரச்சனைகள் வீடமைப்ப்பு  திட்டங்கள் கல்வி சுகாதார பொருளாதார ரீதியான தன்னிறைவுக்கான கட்டமைப்பு வசதிகள் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் யாழில் உள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் மௌலவிகள் பலரும் கலந்து கொண்டனர்.


இறுதியாக கலாநிதி இம்பான தம்பால மஹாநாயக்க தேரருக்கு   உலமா சபை  தலைவர் மௌலவி பி எஸ் சுபியானினால் குர்ஆன் பிரதி ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









Advertisement

Post a Comment

 
Top