smile picker smile picker Author
Title: யார் கண்ணிலும் தென்படாத இலங்கையின் சொத்தான புதிய நீர்வீழ்ச்சி (படங்கள் இணைப்பு)
Author: smile picker
Rating 5 of 5 Des:
இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள...

இலங்கையில் இதுவரை யார் கண்ணிலும் தென்படாத புதிய நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாலங்கொடை, கீழ் வலேபொட பிரதேத்தில் உள்ள காடு ஒன்றில் கிட்டத்தட்ட 100 அடி உயரத்திலான நீர்வீழ்ச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவர் கண்ணிலும் இந்த நீர்வீழ்ச்சி இதுவரை தென்படவில்லை.
சமனல காட்டில் ஆரம்பித்து கீழ் நோக்கி செல்லும் புதுகே ஓய கற்களில் உருவாகியுள்ள இந்த நீர்வீழ்ச்சி, கீழ் பகுதியில் உள்ள கருங்கற்களில் உருவாகியுள்ள நீர்த்தேக்கத்தின் மீது விழுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்வீழ்ச்சி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கண்களில் இதுவரை தென்பட்டதில்லை. இதனை தாம் புதிதாக கண்டுபிடித்துள்ளதாக இமுலபே பிரதேச சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.ரத்னபால வலேபொட தெரிவித்துள்ளார்.
இதற்கு தாங்கள் புதுஓய நீர்வீழ்ச்சி என பெயர் வைப்பதற்கு யோசனை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நீர்வீழ்ச்சி உள்ள இடத்தில் வீதி ஒன்றை நிர்மாணித்து சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதற்கு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Advertisement

Post a Comment

 
Top