smile picker smile picker Author
Title: இது தான் எனது இளமைக்கான காரணம் என மஹிந்த.
Author: smile picker
Rating 5 of 5 Des:
தான் என்றும் இளமையாக இருப்பதற்கான காரணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். தனது இளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும...

தான் என்றும் இளமையாக இருப்பதற்கான காரணத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
தனது இளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக அவர் சாடியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்படும் சிறப்பு மருந்து மூலம் இளமையாக இருப்பதாகவும், அதற்காக பில்லியன் பெறுமதியான பணம் செலவிடுவதாகவும் ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த கருத்து வெளியிட்டார்.
நான் இளமையாக இருப்பதற்கு ஊசிகள் பயன்படுத்துவதாக பலர் குற்றம் சுமத்துகின்றனர்.
அதற்கான பட்டியலும் தங்களிடம் உள்ளதாக கூறுகின்றார்கள். அதனை எங்களுக்கும் காட்டினால் நாங்களும் கொண்டு வந்து அவ்வாறு முயற்சித்து பார்க்கலாம்.
மக்களுக்கு கெடுதல் செய்யாமல், வெறுக்கத்தக்க செயல்களை செய்யாமல், பழி வாங்காமல், தோல்வி, இயலாமை மற்றும் முடியாமை என்பனவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இருந்தால் என்றும் இளமையாக இருக்கலாம். என்றும் சிரித்த முகத்துடன் இருக்கலாம். இது தான் எனது இளமைக்கான காரணம் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Post a Comment

 
Top