இலங்கையை பூர்வீகமாக கொண்ட இளைஞர் ஒருவருக்கு பிரித்தானியாவில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஹிரூஷ ஹென்ரிக்ஸ் என்ற 25 வயதுடைய இளைஞருக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
10 ஆண் சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களை புரிந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஹென்ரிக்ஸ் மான்செஸ்டர் ஸ்குவாஷ் பயிற்சியாளராக செயற்பட்டு வருகிறார்.
இவர் 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்களை, போலி சமூக ஊடகங்களினூடாக தமது சொந்த பாலியல் மன நிறைவுக்காக பயன்படுத்தியுள்ளார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ஸ்குவாஷ் பயிற்சியாளராக அவரது வேலை மூலம் தெரிந்துக் கொண்டவர்களாகும், மற்றவர்கள் அவரை இணையம் மூலம் சந்தித்துள்ளதுடன், அவர்கள் பயிற்சி நடவடிக்கைகளுக்கு இணைத்துக் கொள்ளப்படவில்லை என மன்செஸ்டர் கிரவுன் நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.
மான்செஸ்டர் ஸ்குவாஷ் ஸ்போர்ட்ஸ் மையம் மற்றும் Leisure Etihad வளாகத்தில் ஹென்ரிக்ஸ் பணிபுரிந்துள்ளார். அங்கு அவர் சாதாரண பயிற்சியாளராக பணியாற்றியுள்ளதுடன், தனியார் பயிற்சி அமர்வுகளை அவர் நடத்தியுள்ளதாக கிரவுன் அரச தரப்பு சேவை தெரிவித்துள்ளது.
அவர் குற்றம் சுமத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் மான்செஸ்டர் ஸ்குவாஷ் கழகத்தின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு தங்கள் படங்கள் மற்றும் வீடியோக்களை இணையம் மூலம் காட்டுமாறும், இணையம் ஊடாக பாலியல் செயல்களில் ஈடுபடுமாறும் அவர் தூண்டியுள்ளார்.
அவர் தனது அடையாளத்தை மறைக்க பெண் பெயர்களை பயன்படுத்தியுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களை இன்னும் வெளிப்படையான படங்களை அவருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முறைகேடாக பாலியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டார் என ஹென்ரிக்குஸ் மீது முறைப்பாடு கிடைத்துள்ளது.
அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரது கணினி மற்றும் தொலைபேசிகள் அதிகாரிகளினால் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் அவரது தவறான செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியாகியதன் பின்னர் அவருக்கு 14 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment