ஆழமான கருத்துக்களும் அகன்ற பார்வைகளும் சிப்பிக்குள் முத்தைப் போன்று *ஆசான்* எனும் மூன்றெழுத்திற்குள் பொதிந்து கிடக்கின்றன .
வாழ்வென்பது நெருக்கடிகளின் அழகான தொகுப்பென்பதை புரியாத சிலருக்கு இதனை புரிந்துகொள்ள நூற்றாண்டுகளுக்குள் புதையுண்ட பல அகராதிகள் தேவைப்படலாம் ..
எதிர்காலத்தில் இறந்தகாலத்தை இழந்துவிட்டதாக வருத்தப்படுவதற்கு பதிலாக நிகழ்காலத்திலே எதிர்காலத்தை தீர்மானம் செய்யும் அதிகாரம் பெற்றவர்களாகுவதற்கா இந் நிமிடத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
வாழ்வில் சில விடயங்களை பெறவேண்டுமென்றால் சில விடயங்களை விட்டுக்கொடுத்தே ஆகவேண்டும். இதுவே உலக நியதி . நாம் எம் வாழ்வில் எதனைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகின்றோம் என்ற புரிதல் இல்லாத வரை ஒருபோதும் எதிர்காலத்தை எம்மால் செம்மைப்படுத்த முடியாது. நாம் பிறந்து வழர்ந்த எம் சமுகத்தை ஒரு படி நகர்த்துவதற்காக நம் கையில் கொடுக்கப்பட்ட வாய்ப்பின் பெயரே கல்வி . வாய்ப்பை இழந்து காலத்தை துளைத்து பின்னால் கண்ணீர் மல்க கவலைப்படுவதை விட தன் வாழ்வை எதிர்காலத்தில் மெருகூட்டி வடிவமைக்க அதற்கான அடிக்கல்லை இன்றே நாட்டிக்கொள்ளுங்கள்.
எம் சமுகத்தின் மிகப்பெரிய கோளாறு எதுவென்று தெரியுமா? தனக்கென்று தன் வாழ்க்கை குறித்த மிகப்பெரிய ஓர் சித்திரம் இன்மை . எமது கனவுகள் சின்னதாக இருக்கின்றன. எமது ஆசைகள் சின்னதாக இருக்கின்றன. எமது எதிர்காலம் குறித்த பார்வை சின்னதாக இருக்கின்றது . அதனால்தான் இன்றுவரை நாம் வரையும் சித்திரங்களைக் கூட குறுஞ்சித்திரங்களாகவே வரைந்துகொண்டிருக்கிறோம் .
எம் பலம் எது? பலவீனம் எது? என்பதை எம் உள்ளம் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் எமக்கு சொல்லிக்கொண்டேயிருக்கும்.இதனை கண்டறியாத வரை வெற்றிக்கான பாதை வளைவு நெலிவாகவே இருக்கும் .
தவறி விழுவது தவறல்ல தடுமாறி விழுவது தவறல்ல எழுந்து நிற்காமல் இருப்பதே தவறு என்ற வாழ்கைத் தத்துவத்தை உங்களுக்குள் உரக்கச் சொல்லிக்கொண்டேயிருங்கள். சோதனைகளை முதுகுக்குப் பின்னால் தூக்கி எறியுங்கள் இலக்குகளை உங்கள் கண் முன் நிருத்தி முன்னோக்கிச் செல்லுங்கள்.
சாதனைகள் நிச்சயம் உங்கள் வாயில் தட்டும் . உங்கள் கரம் தொடும். உங்கள் பெயரை இவ்வுலகிற்கு பறைச்சாட்டும் ....
நட்புடன்
irfan rizwan
Post a Comment