smile picker smile picker Author
Title: பிரியாவிடை வாய்ப்பை கொடுக்க முன்வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்: நிராகரித்தார் அதிரடி ஆட்டக்காரர் BOOM BOOM அப்ரிடி
Author: smile picker
Rating 5 of 5 Des:
பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அ...


பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஷாகித் அப்ரிடியின் பியாவிடை போட்டிக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது தயாரானது. ஆனால், அப்ரிடி அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் ஷாகித் அப்ரிடி. தனது அதிரடி ஆட்டத்தால் ‘பூம் பூம்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற ஷாகித் அப்ரிடி டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டும் விளையாடி வந்தார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

இந்த தொடரில் பாகிஸ்தான் முதல் சுற்றோடு வெளியேறியது. அதன்பிறகு பாகிஸ்தான் அணியில் அப்ரிடி தொடர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பவில்லை. இதனால் 2016-ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான தொடரின்போது பிரியாவிடை கொடுக்க தயாராக இருக்கிறோம். அதோடு ஓய்வு பெறுங்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது. ஆனால், பிரியாவிடை போட்டி என்பது என்னுடைய உரிமை என்று அப்ரிடி கூறிவிட்டார். அதன்பின் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட் அணியில் அவர் இடம்பெறவில்லை.

இதன்காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அத்துடன் ஷாகித் அப்ரிடியின் 21 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகக்குழு சேர்மன் நஜம் சேதியை அப்ரிடி சந்தித்து பேசினார். அப்போது பிரயாவிடை போட்டியை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று நஜம் சேதி தெரிவித்தார்.

நஜம் சேதியின் குறிப்பிட்ட வாய்ப்பை அப்ரிடி ஏற்க மறுத்துவிட்டார். இதுகுறித்து அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனக்காக பிரியாவிடை போட்டிக்கு ஏற்பாடு செய்வதாக கூறிய நஜம் சேதிக்கு என்னுடைய நன்றி. துரதிருஷ்டவசமாக எனக்கு ஒப்புக்கொண்ட சில வேலைகள் இருப்பதால், இதில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை.

வீரர்கள் பிரியாவிடை போட்டியுடன் செல்ல வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். மிஸ்பா உல் ஹக் மற்றும் யூனிஸ்கான் ஆகியோர் முறையான பிரியாவிடை போட்டியுடன் செல்ல இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வருங்காலத்திலும் இந்த டிரென்ட் தொடரும் என்று நம்புகிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Post a Comment

 
Top