வெற்றிலைக்கு வாக்களித்துப்பார்...
உன்னைச்சுற்றி ஒரு பய வட்டம் தோன்றும்
காண்பதெல்லாம் காவியாய் மாறும்
தூங்கும்போது திணுக்கிட்டு எழுவாய்
எல்லா வேனும் வெள்ளையாய் தெரியும்
வாக்களித்துப்பார்...
தேசிய கொடியில் நிறங்கள் மாறும்
வடக்கும் கிழக்கும் சூனியம் ஆகும்
ஞானசார நாயகன் ஆவான்
சிங்களவாதம் சினங்கொண்டு பாயும்
வெற்றிலைக்கு வாக்களித்துப்பார்...
கிறீஸ்மேன் கிளம்பி வருவான்
அளுத்கம காணாமல் போகும்
நோலிமிட்டுக்கு நோ லைசன்ஸ் என்பான்
பள்ளி செல்லவும் பயமாக இருக்கும்
வாக்களித்துப்பார்...
மஹிந்த மந்திரி ஆவான்
பிள்ளையான் பார்லிமென்ட் செல்வான்
தம்பியான் தோற்றுப்போவான்
கருணா தியாகி ஆவான்
வெற்றிலைக்கு வாக்களித்துப்பார்...
தொப்பி போட பயமாக நினைப்பாய்
அபாயா அணிவது தேசிய குற்றம் என்பான்
தாடி வைக்கவும் தடையொன்று தோன்றும்
பாங்கு சொல்ல பர்மிஷன் கேட்பான்
வாக்களித்துப்பார்...
பொருட்களின் விலைகள் மலைபோல் உயரும்
ஏழையின் வாழ்வு ஒளி இழந்து போகும்
கண்ணீர் சிந்தியே காலம் களிப்பாய்
இலங்கையில் வாழ பிடிக்காது என்பாய்
வெற்றிலைக்கு வாக்களித்துப்பார்...
எழுச்சியும், வீழ்ச்சியும் ஆரம்பம்
www.facebook.com/
Post a Comment