அழுத்கமையில் நடந்தது சிறியவிடையம் பெரிதுபடுத்தவேண்டாம்.அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை அல்ல அது ஒரு விபத்து என்று சகலருக்கும் சொந்தமான முனால் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சம்பவத்தில் கொலை செய்யபப்ட்டவர்கள் துப்பாக்கி ரவைகள் மூலம் கொல்லப்படவில்லை கத்தி குத்தினால் கொல்லப்படார்கள் என்று இறப்பு சான்றிதழில் எழுதியுள்ளனர்.
முஸ்லிம்களே பெட்ரோல் வெடி குண்டுகள் வைத்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்த விஜித தேரர் மனநோயாளி என்று சொல்லப்பட்டார்.
இவை அனைத்தும் முஸ்லிம்கள் அமைதிவழியை கடைப்பிடித்த பின்புதான்.நாம் குட்டக்குட்ட குனிந்தால் இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் நம்மை நோக்கி வரும்.
ஞானசார விடையத்தில் அரசு இந்தளவு ஆதரவாக இருப்பது அவரிடம் இருக்கும் அன்பின் வெளிப்பாடு என்று சொல்ல முடியாது.மாறாக அடுத்த தேர்தல்களில் அவரின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதோடு அவரை பகைத்துவிடக்கூடாது என்பதும் உண்மை.
இத்தனைக்கும் ஞானசாரவினால் மிஞ்சி மிஞ்சி போனால் அரை மில்லியன் ஓட்டுக்களை மாத்திரமே ஒன்று திரட்ட முடியும்.
அதே நேரம் முஸ்லிம்கள் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தல்களிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தமது ஒரே கருத்தை காட்டினால் அதுவே அரசை ஆட்டம் காண செய்யும்.முஸ்லிம்களின் ஓட்டு விபரம் துல்லியமாக சொல்ல முடியவில்லை இப்போது.இருந்த போதும் ஒரு மில்லியன் ஓட்டுக்களை ஒரே கருத்துக்கு கொண்டுவர முஸ்லிம் தலைமைகளால் முடியும்.ஆனால் அது நடக்குமா?
ஒற்றுமை ஒற்றுமை என்று பேசும் நமது சமூகம் இந்த இடத்தில்தான் அந்த ஒற்றுமையை காட்டியே ஆகவேண்டும்.ஜமிய்யதுள் உலமாவில் அங்கத்துவம் பெற்ற தரப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்த ஒற்றுமையை காட்டுமா?
எழுச்சியும், வீழ்ச்சியும் ஆரம்பம்
www.facebook.com/
Post a Comment