தம்புள்ளை தானே
தன் பிள்ளை இல்லையே என்ற தயக்கமா..
இல்லை
அழுத்கமை தானே
அபே கம இல்லையே என்ற தயக்கமா..
இல்லை
மறிச்சுக்கட்டி சம்பவம் கூட
மறந்துவிட்டதா..
லிமிட்டுகள் தாண்டி
நோ லிமிட்டை கூட விட்டுவைக்க வில்லையே..
தலைமைகளே ஏன் இந்த தயக்கம்
உங்கள் அற்ப ஆசைகளுக்காக
மொத்த சமூகத்தையும் அடகு வைத்து விட வேண்டாம்
அப்படி நீங்கள் அடகு வைத்தால்..
அதற்குரிய வட்டியை உங்கள் வாழ் நாள் முழுவதும் கட்டினாலும் ஈடாகாது
இறுதியாக ஒன்றை சொல்லி முடிக்கிறேன்
மஹிந்தவுடன் நீங்கள் இன்னும் ஒட்டிக் கொண்டிருங்கள்..
ஆனால்,
எம் மக்களில் அறுதிப் பெரும்பாலோனோர் நீங்கள் முடிவெடுக்க முன்னமே முடிவெடுத்த்து விட்டார்கள்
என்பதை மறந்து விட வேண்டாம்
எழுச்சியும், வீழ்ச்சியும் ஆரம்பம்
www.facebook.com/
Post a Comment