https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்கப்படவில்லை : சோபித தேரரிடம் மைத்திரி தெரிவிப்பு?
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்பட்டதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிச...
maithiripala-sobitha60002
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வேட்பு மனு வழங்கப்பட்டதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதாக சில ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
மக்கள் நீதிக்கான சமூக இயகத்தின் ஏற்பாட்டாளரும், கோட்டே நாகவிகாரையின் விகாரதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரிடம் ஜனாதிபதி இந்த நிராகரிப்பை வெளியிட்டுள்ளதாகவும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
மாதுலுவாவே சோபித்த தேரரை ஜனாதிபதி நேற்று மாலை அழைத்த வேளையில், இவ்வாறு சந்தேகத்திற்கிடமான வகையில் கையொப்பமிடப்பட்டு வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவக்கப்படுகின்றது.
சோபித்த தேரர் ஜனாதிபதியை சந்திக்க சந்தர்ப்பம் கேட்டதற்கமைய நேற்று மாலை ஜனாதிபதி சோபித்த தேரரை அழைத்திருந்தார். அவரை சந்திக்கும் வரையில் சந்தேகிக்கும் வகையில் ஊடகங்கள் ஊடாக வெளியாகிய அறிக்கை தொடர்பில், மனமுடைந்திருந்த சோபித்த தேரர், ‘இனி உங்களை சந்திப்பதில் அவசியம் இல்லை, நீங்கள் எனக்கு அறிவிக்காமல் உங்களுக்கு விரும்பியதனையே செய்தீர்கள்’ என கூறி ஜனாதிபதியின் அழைப்பினை நிராகரித்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில், குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து காரணங்களுக்கும் தனக்கு எவ்வித சம்பந்தம் இல்லை எனவும் உண்மையில் அது சுசிலின் வேலையா? என தான் தேடி பார்ப்பதாகவும் ஜனாதிபதி பதிலளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெயரில் அறிக்கை வெளியாகியதற்கு முதல் நாள் கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென உறுதியாக குறிப்பிட்டிருந்த நிலையில் நேற்று காலை வாசு தேவ நாணயக்கார, மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்புரிமை வழப்படாமை உறுதி என்றும் ஊடகத்திடம் அறிவித்திருந்தார்.
எனினும் நேற்று காலை சுசில் பிரேம ஜயந்த, தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்சவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாகவும், இதனைத் சுசில் பிரேமஜயந்தவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்ட நிலையில், நேற்று மஹிந்த தரப்பில் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் தினேஷ் குணவர்தன குறித்த ஊடக அறிக்கையை வாசித்துள்ளார்.
இதற்கிடையில் இந்த ஊடக அறிகை முற்றிலும் போலியானதென ஜனாதிபதி ஊடக பிரிவு உத்தியோக பூர்வமாக நிராகரிப்பதற்கு அவசியமான நேரம் இருந்த போதும் இதுவரையில் அவ்வாறு எதனையும் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Post a Comment

 
Top