பொதுத்தேர்தலில் மஹிந்த ராஜபக்ச, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடலாம் என்று அறிவிக்கப்பட்டமையை அடுத்து வெள்ளிக்கிழமை இரவு மஹிந்தவும் அவரின் சகாக்களும் சந்திப்பு ஒன்றை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த சந்திப்பில் அதாவுல்லாஹ, ஹிஸ்புல்லா, அப்துல் காதர் உள்ளிட்ட முஸ்லிம் பிரமுகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மஹிந்தவுக்கு வேட்புமனு அனுமதியை வழங்கியமைக்காக ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது குருநகால் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஸவை போட்டியிடுமாறு சுதந்திரக் கடசியின் முஸ்லிம் தரப்பு அரசியல் பிரமுகர் அப்துல் சத்தார் அழைப்பு விடுத்துள்ளார். சத்தாரின் இந்த அழைப்புக்கு ஏனைய முன்னாள பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆதரவை வெளிப்பத்தியுள்ளனர்.
அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்துலில் தான் தோல்வியடைந்ததிலிருந்து, தனக்கு சர்த்தார் பக்க பலமாக இருந்து வருவதாக மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இந்த கலந்துரையாடலின் போது அநுராதபுரத்தில் நடைபெறவுள்ள மஹிந்தவை பிரதமராக்கும் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவையும் பங்கேற்க அழைப்பு விடுப்பதெனவும் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறியவருகிறது.
Post a Comment