https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: ஞானசாரவின் அடுத்த இலக்கு இந்துக் கோயில்கள்? (video)
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
இன்று வடக்கில் நடைபெறும் விடயங்களுக்கு எதிராக, வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை இல்லாதொழிக்க  எமக்கு தேவைக்...




இன்று வடக்கில் நடைபெறும் விடயங்களுக்கு எதிராக, வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரையுள்ள தமிழர்களின் கோயில்களை இல்லாதொழிக்க  எமக்கு தேவைக்கும் அதிகமான சக்தியுள்ளது, இதை செய்துகாட்ட எங்களால் முடியும். எம்மால் முடியாது என்ற காரணத்தால் நாம் சும்மா இருக்க வில்லை. இதை செய்துவிட எமக்கு தேவைக்கும் அதிகமான பலம் உள்ளது. இதை நாங்கள் செய்து விட துணிந்துவிட்டால் நாட்டில் என்ன நடக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள். தமிழர்கள் இந்த ஜனாதி மைத்ரிபால சிறிசேனவை  ஆட்சியில் அமர்த்த வாக்களித்த ஒரே காரணத்திற்காக இந்த நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்க முடியாது. ஆணுமல்லாத பெண்ணுமல்லாத பொம்மைகள் ஆட்சிக்கு வந்தால் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறும் என்பது  நாம்  எதிர்பார்த்ததுதான்.



பண்டாரநாயக்கர்கள் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர்களில்லை. இவர்கள் இந்திய வம்சாவளியை கொண்டவர்கள் (PRONOUNCED  AS PANDARA NAYAGAM  – NOT  BANDARA NAYAKA ). இந்த பண்டார நாயக்கர்கள் சுமார் மூன்று பரம்பரைகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தார்கள். இவர்கள் தமிழர்கள். அதனால் தான்  நாங்கள் பிரபாகரனுக்கு ஏதாவது சொன்னால் சந்திரிக்காவுக்கு கோபம் வருகின்றது. ஆகவே தான் நங்கள் சொன்னோம் இவர் பிரபாகரனின் மூத்த சகோதரி என்று. இவர்கள் எப்பொழுதும் ஹைப்ரிட் வளவ் காரர்களாக இருந்து கொண்டு வெள்ளையர்களுக்கு வால்பிடித்தவர்கள் . ஆகவே இந்த விதவை சந்திரிகா பண்டார நாயக தனது கீழ்த்தரமான வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். சும்மா ஆட்டம் போட வரக்கூடாது என்பதை சொல்லிவைக்க விரும்புகின்றோம். விதவையான சந்திரிக்கா மீண்டும் திருமணமொன்றை நடத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறிக் கொள்கின்றோம் என நேற்றைய தினம் பொதுபல சேனா பயங்கரவாதி ஞானசார ஊடக சந்திப்பொன்றை நடாத்தி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



– ஏ எம் எம் முஸம்மில்- பதுளை



Advertisement

Post a Comment

 
Top