https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: அவகேடாவின் மருத்துவ குணங்கள்
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
அவகேடாவில் 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் உள்ள வைட்டமின் பி6, போலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ...


அவகேடாவில் 25க்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
இதில் உள்ள வைட்டமின் பி6, போலிக் ஆசிட் மற்றும் ஒலியிக் அமிலம் (oleic acid) ஆகியவை இதயம் தொடர்பான நோய்கள் வருவதைத் தடுக்கின்றன. மேலும், இந்தச் சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
குறையும் கொழுப்பின் அளவு
பீட்டா சிடோஸ்டெரால் (beta sitosterol) அதிகளவில் உள்ளதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை இந்தப் பழம் வெகுவாகக் குறைக்கும். ஹைபர்கொலஸ்ட்ரொலெமியா (Hypercholesterolemia) என்ற நோயின் ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் ஒருவர், 7 நாட்கள் தொடர்ந்து அவகேடோவை சாப்பிட்டு வந்தால், அந்த நோயின் தாக்கம் 17 சதவிகிதம் வரை குறையும்.
ரத்தக் கொதிப்பு
வாழைப் பழத்தில் இருக்கும் பொட்டாஷியத்தை விட அவகேடோவில் 35 சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். மேலும், வாழைப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளதால் செரிமானத்துக்கு ஏற்றது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையைச் சமன் செய்கிறது.
அதிகரிக்கும் பார்வை திறன்
லுடீன் (lutein) என்ற ஆன்டி ஆக்சிடன்ட், வயதாகிய பிறகும், பார்வை திறன் குறையாமல் தடுக்கிறது. மேலும், கண்களில் ஏற்படும் புரையை வளர விடாமல் தடுக்கும் ஆற்றல் அவகேடோவில் உள்ளது.
புற்றுநோயை தடுக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்
ஆன்டி ஆக்சிடன்ட் இதில் நிறைந்திருப்பதால் ஆண்களுக்கு வரும் ப்ராஸ்டேட் புற்றுநோயையும், பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயையும் தடுக்கிறது.
மூப்படைதலை தடுத்து இளமையைத் தக்க வைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்யும். நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். செல்களைச் சேதமடையாமல் பாதுகாக்கும்.
அவகேடா ஜூஸ்
அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும்.
மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

Advertisement

Post a Comment

 
Top