
தாயை இழந்து கதறும் குழந்தையின்
குரல், குழந்தையை இழந்து பதறும்
தாயின் குரல்,
கணவனின் சடலத்தைப்
பார்த்து ஏங்கும் மனைவியின் கண்ணீர்,
மனைவியின்
சடலத்தை பார்த்து துடிக்கும் கணவனின்
நெஞ்சம்.
எங்கே…..
என்னை கொஞ்சிக் கொஞ்சி வளர்த்த என்
அன்னை எங்கே……
எங்கே…..
என்னை வாரியணைத்து, என்
தேவைகளை பூர்த்தி செய்யும்
என் தந்தை எங்கே……
என்ற குழந்தைகளின் அழுகுரலும்…
எங்கே…..
நான் பத்து மாதம் சுமந்து பெற்று, என்
ரத்தத்தை பாலாய் கொடுத்து என்
பிள்ளைகளை எங்கே…….
என்று தாயும்,
எங்கே……
என் தோளிலும், மாரிலும்
துள்ளி விளையாடிய,
எனதருமை செல்வங்கள் எங்கே….
என்று தந்தையும்
கதறும் கண்ணீரை பார்ப்பதற்கு,
கண்ணுள்ளவர்களெல்லாம்…
குருடாகிவிட்டனர்….
அழுகுரலை கேட்பதற்கு
காதுள்ளவர்களெல்லாம்
செவிடாகிவிட்டனர்….
ஆள்பவர்களெல்லாம்…
தன்னுடைய ஆளுமையை பயன்படுத்த
முடியாத
ஆண்மையற்றவர்களாகி விட்டனர்…….
ஆகவே! எம் இறைவா!
எங்களுக்கு எதிர்த்து போராடும்
வலிமையை கொடு…
இல்லையேல்….
எதிரிகளின் நெஞ்சத்தில்
இரக்கத்தை கொடு…
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment