
பாலஸ்தீன்
பாங்கு சப்தத்தை விட,
பாவிகளின் பீரங்கி சப்தம்தான்
எங்களை நித்தம், நித்தம் வந்தடைகிறது...!
உலகத்திலேயே துப்பாக்கியின்
"ரவை"களையும்,
பீரங்கியின் "தீப்பொறி"யையும்
சாப்பிட்டு மாண்டவர்கள்
எங்கள் பூமியில்தான் ஏராளம்....
வானில் இருந்து மழை பொழிவதை விட,
வானில் இருந்து ஏவுகணை மழைதான் அதிகம்
எங்களை வந்தடைகிறது!
தாய் தந்தை இருந்து
பிறந்தோம்...
ஆனால்...
தாய் தந்தை இல்லாமல்...
வளர்பவர்கள் தான் எங்களில் அதிகம், அதிகம் .
மனித உரிமை ஆர்வலர்கள்...
எங்களை மட்டும்
மனித உயிர்களாக மதிப்பதில்லை!
ஆனால்...
காலம் கனியும்....
உலகமே திரும்பி பார்க்கும் அளவு..
இன்ஷா அல்லாஹ் ..
எங்கள் போராட்டம் மாறும்....
எங்கள் மண்ணில் உயிர்களை புதைக்க வில்லை!
உயிர்களை விதைத்திருக்கிறோம்.!
வீர விளைச்சலை தரும்...
இன்ஷா அல்லாஹ்...
எங்களை வேரறுக்க நினைக்கும்
விஷச் செடிகளை ...
இந்த மண்ணை விட்டு துடைத்தெறிவோம்!!
எங்கள் நெஞ்சத்தில்ஈமான் இருக்கும் வரை...
எங்களுக்கு தோல்வியில்லை.!! ஆரம்பம்
Post a Comment