https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: அடித்துக் கொண்டிருப்பவன் ராணுவம் திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
மனிதாபிமான மகான்களே உங்கள் மனிதத்தை ஏன் மறந்தீர்கள்? எங்கே மறைத்தீர்கள்? எதற்காக எங்களிடம் பாராமுகம்? முஸல்மானின் உயிருக்கு உங்கள் மனிதாபிம...



மனிதாபிமான மகான்களே
உங்கள் மனிதத்தை
ஏன் மறந்தீர்கள்?
எங்கே மறைத்தீர்கள்?
எதற்காக எங்களிடம் பாராமுகம்?

முஸல்மானின் உயிருக்கு
உங்கள் மனிதாபிமான சந்தையில்
மதிப்பு இது தானா.?
எம் குருதியில் குளித்து
எம் உயிருடன் வேடிக்கை காண
அப்படியென்ன சுகம் உங்களுக்கு?

வரலாறு நெடுகிலும்
சபிக்கப்பட்ட சண்டாளர்களுக்கு
இரக்கம் காட்டியது குற்றம் தான்...
ஐரோப்பா அடித்து விரட்டியவர்களுக்கு
அடைக்கலம் அளித்ததும்
குற்றம் தான்...

மழலைகளை பொருக்கியெடுத்து
மண்ணீல் புதைத்து
நாங்கள் குமுறிச் சாக
மெளனங்களை மனதில் புதைத்து
நீங்கள் இருங்கள்!

எங்கள் பூமியின் காலநிலை
எப்போதும் போர்மேகம்
எங்கும் குண்டு மழை
இடியோசை மிஞ்சும்
உயிரின் கதறல்கள்
பாலை நிலத்திலும் பாயும்
சிவப்பு நதி!

உலக இஸ்லாமியர்களுக்கு
தினம் ஐவேளைத் தொழுகை
எங்களுக்கு ஆறு வேளை
ஜனாஸா தொழுகையும் சேர்த்து!

மிருக வதையென்று
வசனங்கள் முழங்கும்
போலி மனிதாபிமானிகளே
மனித இனமே அழிகிறதே
உங்கள் வாயை அடைத்த
கொழுக்கட்டைக்கு என்ன பெயர்?
மனிதாபிமானமா?

எண்ணெய் வயல்களை கொள்ளையிட
அண்ணன் நடத்திய போருக்கெல்லாம்
தீவிரவாதத்துகெதிரான போரென்று
பொங்கி எழுந்தீர்களே
இஸ்ரேலிய தீவிரவாதத்துக்கு எதிராக
உங்கள் பொங்கல், பொங்காமல்
போனது ஏனோ?

அடித்துக் கொண்டிருப்பவனும்
அடிமை படுத்துபவனும் ராணுவம்
திருப்பி அடிப்பவன் தீவிரவாதி
ஊடகங்களே உங்கள் தர்மம்
நிலைக்குமென்றா நினைக்கிறீர்கள்!

நொடிகள் தோறும்
மரணத்தை நேசித்து
விடுதலையை சுவாசிப்போம்
ஈரக் குலைகளை
டாங்கிகள் சிதைத்தாலும்
ஈமானை சிதைக்க
ஒரு காலும் உங்களால் முடியாது
பாவிகளே.!

உயிரை தந்தவனுக்காய்
உயிரை தருவதற்கு
அஞ்ச மாட்டோம்
எந்த நாய்களிடமும்
கெஞ்ச மாட்டோம்!

போலியாய் மனிதம் பேசி
உங்கள் இனவெறியை
இனம் காட்டிக் கொள்ள
இன்னும் நிறைய சந்தர்ப்பங்கள்
உங்களுக்கு உண்டு!
குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
எங்கள் விடுதலையை காணாமல்
இஸ்ரேலின் அழிவை காணாமல்
உலகம் அழிந்து விடாது! ஆரம்பம்

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1

Advertisement

Post a Comment

 
Top