சிறிலங்காவின் அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் முக்கியமாக மஹிந்தவின் பிரதமர் கனவு விவாதிக்கும் விடயமாக மாறியுள்ளது.
சிறிலங்காவின் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மஹிந்தவின் வேட்புமனு தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்க மஹிந்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும் அதற்கான அங்கீகாரம் ஜனாதிபதி மைத்திரியால் வழங்கவில்லை.
இந்நி்லையில் மஹிந்த ராஜபக்சவுக்கு சுதந்திரக் கட்சியில் வேட்புரிமை வழங்கப்பட மாட்டாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித திறனும் இல்லை. எனவே சுதந்திரக் கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித அச்சுறுத்தல்களும் ஏற்படாது.
மஹிந்தவுக்கான வேட்புரிமை வழங்காமல் இருப்பதில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரி உறுதியாக சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
எனினும் மஹிந்த உட்பட குழுவினருக்கு வேட்புரிமை வழங்குவதற்கு மைத்திரி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறான நிலைமையில் அதற்கு எதிர்ப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment