நான் சாகும் வரை மறக்கமுடியாத மூவர் (எனிமிகள்) உள்ளதாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூவரை குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபச்க சுட்டிக்காட்டியுள்ள அந்த மூவரில் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் அடங்குவது விஷேட அம்சமாகும்.ஜனாதிபதி மைத்ரி ,அமைச்சர் ராஜித சேனாரத்ன,மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரே அந்த மூவராவர்.
கடைசி வரை தன்னோடு கூட இருந்து தன்னை தோற்கடிக்க உயிரை பணயம் வைத்து தைரியத்துடன் களமிறங்கிய மைத்ரியையும் அவருக்கு உறுதுணையாக களத்தில் இறங்கிய ராஜித சேனாரத்ன ஆகியோரும் மஹிந்த ராஜபக்ஷவின் மறக்க முடியாத முதல் இருவரில் (எனிமி லிஸ்டில்) அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை.
மஹிந்த அரசாங்கத்தில் வடக்கு மக்களுக்காக பாரிய அபிவிருத்திகளை பெற்றுக்கொண்டு மைத்ரி அணியுடன் இணைந்துகொண்ட அமைச்சர் ரிஷாத்தை மூன்றாவது மறக்க முடியாத நபராக (எனிமியாக) குறிப்பிட்டுள்ளார்.
மைத்ரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக தன்னை அறிவித்தபோது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சில மணி நேரங்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மகிந்தவுடன் இணைந்து ஊழல் செய்துவிட்டார் யார் மஹிந்த அரசில் இருந்து வெளியேறினாலும் இவர் வெளியேற மாட்டார் என சிலரால் விமர்சிக்கப்பட்ட அமைச்சர் ரிஷாத் அதனை பொய்ப்பிக்கும் வகையில் தங்கள் கட்சிக்கு வாக்களிக்கப்பட்டு வழங்கப்படாத தேசிய பட்டியல் ஆசனத்தை அஸ்வர் ஹாஜியிடம் இருந்து அமைச்சர் அமீர் அலிக்கு பெற்றுக்கொடுத்த அதன்பின்னர் மஹிந்த அரசில் இருந்து மைத்ரியுடன் இணைந்துகொண்டு மகிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தது குறிப்படத்தக்கது.
Post a Comment