முட்டையில் கொலஸ்ட்ரால் குறைவான அளவிலேயே உள்ளது.
முட்டையில் உள்ள சத்துக்கள்
உடலுக்குத் தேவையான அனைத்து வகையான வைட்டமின்களும் (ஏ, பி, சி, டி, இ) இதில் உண்டு. மேலும், தைதாக்சின் சுரக்கத் தேவையான அயோடின், பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு தேவைப்படும் பாஸ்பரஸ் போன்றவையும் முட்டையில் உண்டு.
எத்தனை முட்டை சாப்பிடலாம்
1. பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்ளும் ஆண்கள் அதற்கேற்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் டஜன் கணக்கில் முட்டை சாப்பிட்டாலும் அவர்களுக்கு எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாது.
தசைகள் செழுமையாகத் தெரிவதற்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பிட்னஸ் பயிற்சியை மேற்கொள்பவர்கள் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள்.
2. கணனி முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.
மஞ்சள் கரு சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும், இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும்.
3. மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். தேவையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை கூட்டும்.
4. முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. 10-15 நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்தால் ஒருவித வாசனை வரும். முட்டை அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடும் முட்டையே ஆரோக்கியத்துக்கு உகந்தது.
5. காய்கறிகளை நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும், ஆகவே முட்டை சாப்பிடுங்கள்.
|
Advertisement

Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment