
மணிக்கு மணி மனித நேயம் மக்கிக்கொண்டு
வரும் இந்த தேசத்தில் எனக்கு வாழப்பிடிக்கவில்லை
மனிதநேயத்தை சாகடித்துவிட்டு மனிதன்
வாழநினைக்கின்றான்.
மனிதநேயத்தை சாகடித்துவிட்டு மனிதா நீ
வாழ்வது எங்கே?- என்று நீ
ஒருநாளாவது,ஒருநிமிடமாவது யோசித்தாயா?
மனிதன் வாழும் பூமியில் இல்லை “மனிதநேயம்”
அதை நினைத்தேன் ஆனது எனது இதயம் “காயம்”
மானிடா! மங்கி வரும் மனிதநேயத்துக்கு இனிமேலாவது நீ பூசு சாயம்.
இல்லையேல் மண்ணில் மனிதநேயம் “மாயம்”
நாளுக்குநாள் தேய்பிறை ஆகிவரும் மனிதநேயத்தை
வளர்பிறை ஆக்குவோம்.தேய்ந்துவரும் மனிதநேயத்தை
சாய்ந்துவரும் மனிதநேயத்தை மானிடா! உடனே
பாய்ந்து நீயும் காப்பாற்று, இல்லையேல் ஒருநாள் உன்னைக்
காப்பதற்கு ஒரு மனிதநேயம் இல்லை உலகில்.
இதை இப்படியே விட்டுவிட்டால் நாடு கெட்டுவிடும்
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment