
மகன் வெளிநாட்டில் இருக்கிறார்… இங்கு பெண் பார்க்கிறார்கள். உங்களுக்காக சில அறிவுரைகள்.
மகன் வெளிநாட்டில் இருக்கிறார். நாட்டில் அவருக்கு
தீவிரமாக பெண் தேடுகிறார்கள். இதுவரை இருபவதுக்கும்
அதிகமான பெண்பார்த்துவிட்டார்கள்.பா
பெண்களின் புகைப்படங்களும் ஒவ்வொரு முறையும்
வெளிநாட்டில் இருக்கும் மகனுக்கு வட்ஸப் மூலம்
அனுப்பப்படுகிறது.ஆனால் இதுவரை எந்த முடிவும்
எட்டப்படவில்லை.
பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் எப்படியாவது தங்கள்
பிள்ளைகளை கரை சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக
தங்கள் மகளைப் பார்க்கவரும் அனைவரையும் நன்றாக
கவனித்து, உணவளித்து அன்போடு வழியனுப்புகிறார்கள்.
ஆனால் மாப்பிள்ளை வீட்டாருக்கு இதில் இருக்கும்
கஷ்டங்கள்,வலிகள்,சங்கடங்கள
தெரிவதில்லை.
மகனை எங்காவது ஒரு வெளிநாட்டில்
வைத்துக் கொண்டு அவருக்கு பெண் பார்ப்பதற்காக
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்தோடு
கிளம்பி விடுகிறார்கள். ஒரே பயணத்தில் இரண்டு, மூன்று
பெண்பார்த்துவிட்டு வருபவர்களும் நம் வட்டத்தில்
இருக்கிறார்கள்.
பெண் பார்ப்பது,பார்க்கச் செல்வது ஒன்றும் தவறில்லை.
ஆனால் அதற்கென்று சில அழகிய வழிமுறைகள்
இருக்கின்றன.
குறைந்ததது இந்த இடம் எமது மகனுக்கு,
எமது குடும்பத்துக்கு ஒரு 50% ஆவது பொருத்தமாகும்
என்ற நம்பிக்கையை சில விசாரிப்புகளின் பின்னராவது
அறிந்து கொண்டு செல்வது நல்லது.
ப்ரோகர்மார் சொல்லும் இடமெல்லாம் வேனில் ஏறிக்கொண்டு பெண்பார்த்துத் திரியும்
கலாச்சாரம் நம் சமூகத்தில் இன்னும் நெறிப்படுத்தப்பட
வேண்டும்.
அதோடு மாப்பிள்ளையை வெளிநாட்டில் வைத்துக்
தனிப்பட்ட அறிமுகம் எதுவும் இல்லாமல் வரும் திருமணப் பேச்சுக்கள் குறித்து பெண்வீட்டாரும் நிறைய சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
ஏனென்றால் திருமணம் என்பது
மணமகள், மணமகன் இருவரும் நேரடியாக பார்த்து
அவர்கள் இருவரும் இறுதிமுடிவுக்கு வரவேண்டிய
விடயம்.
அது ஃபொடோ அனுப்புவதன் மூலமோ,
ஸ்கைப்பில் பேசுவதன் மூலமோ இறுதி முடிவை
எட்டுவது என்பது மிக கஷ்டமான காரியமாகும்.அந்த
ஃபொடோ அனுப்புதல்,ஸ்கைப்பில் பேசுதல் போன்ற
நவீன பெண்பார்த்தல் நடைமுறைகளினால் வேறு பல
பிரச்சினைகள் வருவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன.
பெண்பார்த்துவிட்டு வந்து அந்தப் பெண்ணின் தலை முதல் கால்வரை கூடிக் கூடி கதைப்பவர்களாகவும் பெண்களே இருக்கிறார்கள்.
நாளை தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கும்
இப்படியான நிலமைகள் வரலாம் என்பதை கருத்திற்
கொண்டாவது பெண்கள் இந்த விடயத்தில் மிக நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும்.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment