காதலர் தினம் வெலன்டைன் பாதிரியாரின் நினைவாக கொண்டாடப்படுகிறது. கி.பி 270 ம் ஆண்டு ரோம பேரரசரான இரண்டாம் கிளாடியுஸ் காலத்தில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள தடை இருந்தது. திருமணம் செய்து கொண்டால் ஆண்களுடைய வீரம் குறைந்து விடும் என்பது அரசரின் நம்பிக்கை. இதனால் பெண்களை ஏறெடுத்தும் பார்க்கக் கூடாது என்ற தடை விதித்திருந்தார் ரோமப் பேரரசர். திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று துடித்தவர்களுக்கு உதவி செய்து அவர்களுக்கு அரச கட்டளையை மீறி திருமணம் நடத்திவைத்தார் வெலன்டைன். இந்த உதவிக்கு மன்னன் மரணதண்டனையை பரிசளித்தார். இரண்டு மனங்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்த பாதிரியார் வெலன்டைன் கொல்லப்பட்ட நாள் பிப்ரவரி 14.
எனவே நாங்கள் வெலன்டைன் அவர்கள் இறந்த தினத்தைத்தான் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
வெலன்டைனின் இறப்புக்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மேலே சொன்ன காரணம்தான் பிரதான இடத்தைப் பிடிக்கின்றது. காதலர் தினத்தை இவர் இறந்த தினத்தில் கொண்டாடும் சகோதரர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள். அவர் காதலுக்காக தனது உயிரை விடவில்லை. மாற்றமாக திருமணம் முடித்து வைப்பதற்காகவே தனது உயிரைத் துறந்திருக்கின்றார்.
இந்தத் தினத்தை நீங்கள் கொண்டாடுகின்றீர்கள் என்றிருந்தால் வெலன்டைன் கூட உங்களுக்கு எதிரான ஒரு செயற்பாட்டாளரே என்பதனை விளங்கிக் கொள்ளுங்கள். அவர் திருமணமுடித்து வைத்தாரே தவிர சீரழிகின்ற இந்த மேசமான நோயின்பால் துண்டவில்லை.
மொத்தத்தில் வொலண்டைனே உங்களுக்கு எதிரானவர். அதனை புறிந்து செயற்படுங்கள். இந்தத் தினம் இப்போது பணமுதலைகள் பணம் சம்பாதிக்கும் தினமாக மறிவிட்டது. உங்களைச் சூழ நடக்கின்ற விடயங்களை சற்று கவனத்துடன் அவதானியுங்கள். அப்படி அவதானித்தால் மேற்கினுடைய காலனித்துவத்தின் இன்னுமொரு வடிவம்தான் என்பதனை நீங்கள் விளங்கிக் கொள்வீர்கள்
Like:: - www.fb.com/arrambam1
Post a Comment