பிரேஸிலின் கால்பந்து ஜாம்பவான் பீலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
74 வயதுடைய பீலே கடந்த 13 ஆம் திகதி சிறுநீரகப்பையில் கற்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதன்பின் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் பீலேக்கு திடீரென உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டது.
உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரில் தொற்றுக் கிருமிகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment