நெவில் அந்தனி
அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர் பிலிப் ஹியூஸின் மறைவு தங்ளது அணிகளைப் பெருந்துயரத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திவிட்டுள்ளதாக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் மற்றும் இங்கிலாந்து அணித் தலைவர்அலஸ்டெயார் குக்கும் தெரிவித்தனர்.
இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி தொடர்பான ஆயத்தங்கள் குறித்து செய்தியாளர்ளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கெத்தாராம ஆர்.பிரேமதாச விளையாட்டரங்க கேட்போர்கூடத்தில் இன்று பகல் நடைபெற்றபோது
இரண்டு அணிகளிதும் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.
ஏஞ்சலோ மெத்யூஸ்
'பிலிப் ஹியூஸின் மறைவு குறித்த செய்தியை நேற்று காலை அறிந்தபோது பயிற்சியில் ஈடுபட்டிருந்த எங்களை ஒருகணம் உலுக்கிவிட்டது. இது ஒரு துரதிர்ஷ்டவசமானதும் எதிர்பாராததுமான துன்பியல் சம்பவமாகும். இத்தகைய விபத்துகள்
இனி ஒருபோதும் இடம்பெறக்கூடாது என வீரர்கள் என்ற வகையில் நாங்கள் பிரார்திக்கின்றோம்|| என இரண்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதேவேளை, 'பிலிப் ஹியூஸ் ஒரு கலகலப்பானவரும் எல்லோரையும் கவரக்கூடியவருமாவார். சர்வதேச ஒருநாள் கிரிக்கட் அரங்கில் எமது அணிக்கு எதிராகவே அவர் முதன்முதலில் விளையாடினார். (மெல்பர்ன் 2013 ஜனவரி 11).
அந்த கன்னிப் பிரவேசத்தில் சதம் குவித்த அவர் ஆட்டநாயகன் ஆனதை எங்களால் மறக்கமுடியாது. அவரது ஆத்துமா நித்திய இளைப்பாறுதல் அடைய பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் எமது அவுஸ்திரேலிய கிரிக்கட் நண்பர்களுக்கும் எங்களது
ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்|| என ஏஞ்சலோ மெத்யூஸ் கூறினார். மேலும் எந்தவொரு பந்துவீச்சாளரும் துடுப்பாட்ட வீரரை இலக்கு வைத்து பந்துவீசுவதில்லை எனக் குறிப்பிட்ட மெத்யூஸ், இப்படியான ஒரு துன்பியல் நிகழ்வு இடம்பெறும் என தாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார் அவர்.
அலஸ்டெயார் குக்
இதே போன்ற கருத்துக்களை வெளியிட்ட அலஸ்டெயார் குக், துடுப்பாட்ட வீரர்களின் பாதுகாப்பு கருதி தற்போதைய தலைக்கவசங்களைவிட உயிராபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்படவேண்டும் எனவும் அதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இது குறித்து உற்பத்தி நிறுவனங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த அதிர்ச்சியிலிருந்தும் சோகத்திலிருந்தும் அவுஸ்திரேலிய கிரிக்கட் வீரர்களும், அந் நாட்டு கிரிக்கட் நிறுவன அதிகாரிகளும் மீள்வதற்கு சிலகாலம் செல்லும். அவர்கள் சீக்கிரமே மீளவேண்டும் என்பது கிரிக்கட் உலகின் பிரார்த்தனையாகும்|| எனவும் அவர் குறிப்பிட்டார்.
மெத்யூஸ்
இது இவ்வாறிருக்க, பிலிப் ஹியூஸின் மறைவுக்கு மத்தியிலும் நாங்கள் இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் விளையாடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோம். எனவே திறமையை வெளிப்படுத்த முயற்சிப்போம் எனவும் மெத்யூஸ{ம் குக்கும் குறிப்பிட்டனர்.
'இந்தியாவில் அடைந்த தோல்விகளைத் தொடர்ந்து மீண்டும் வெற்றிபெற ஆரம்பித்துள்ளோம். எனினும் சகலதுறைகளிலும் இன்னும் முன்னேற்றம் காணவேண்டும். பந்துவீச்சைப் பொறுத்த மட்டில் முதல் பத்து ஓவர்கள் சிறப்பாக அமையவில்லை. துடுப்பாட்டத்திலும் இன்னும் சிறப்பாக செயற்படவேண்டும். அதற்கான தீவிர பயிற்சிகளில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்|| என மெத்யூஸ் அணியின் திட்டம் குறித்து விளக்கினார்.
இரண்டாவது போட்டிக்கு அணியில் மாற்றங்கள் இடம்பெறுமா எனக் கேட்டபோது, அது குறித்து நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. எங்களுக்கு வழங்கப்படும் ஆடுகளத்தை நன்கு பரீட்சித்த பின்னர் இறுதி அணியைத் தீர்மானிப்போம்|| என
பதிலளித்தார்.
Post a Comment