அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உயிரிழந்ததையடுத்து இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இடம்பெறவிருந்த டெஸ்ட் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதன் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 4 ஆம் திகதி பிரிஸ்பேனில் தொடங்குவதாக இருந்தது.
இந்நிலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் உள்ளூர் போட்டி ஒன்றின் போது பந்து தலையில் தாக்கியதில் கடந்த 27 ஆம்திகதி உயிரிழந்தார். இது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இதனால் இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டியை ஒத்திவைக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலிய வீரர்கள் இந்த நேரத்தில் விளையாடும் மனநிலையில் இல்லாததால் போட்டியை ஒத்திவைக்க வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஹியூக்ஸின் மரணத்தையொட்டி முதல் டெஸ்ட் போட்டியை ஒத்திவைப்பதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. எதிர்வரும் 4 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த டெஸ்ட் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது.
முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹியூக்ஸின் இறுதிச்சடங்கு எதிர்வரும் 3ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment