smile picker smile picker Author
Title: அந்தர் பல்டி அடித்த அமெரிக்கா..!! No War (வீடியோ இணைப்பு)
Author: smile picker
Rating 5 of 5 Des:
உலக நாடுகளுக்கு ஆயுதங்களை தயாரித்து சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறது அமெரிக்கா. அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் விற்பனை...

உலக நாடுகளுக்கு ஆயுதங்களை தயாரித்து சப்ளை செய்யும் தொழிலை செய்து வருகிறது அமெரிக்கா.
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் ஆயுதங்கள் விற்பனையாக வேண்டும் என்பதற்காக, மற்ற நாடுகளிடையே எல்லை பிரச்சனை முதல் பயங்கரவாத அச்சுருத்தல் வரை பிரச்சனையை வெடிக்க வைக்கிறது.
அப்படி தங்களிடம் ஆயுதம் வாங்கும் நாடுகள் சுயமாக ஆயுதம் தயாரித்தால், அந்த நாடு எதிரி நாடாகவும், தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகவும், அணு ஆயுதத்தை தயாரிப்பதாகவும் அமெரிக்கா அறிவிக்கும்.
அதன் அடுத்த கட்டமாக உலக நாடுகளை, அந்த நாடுகள் அச்சுறுத்துவதாக கூறி பொருளாதார தடை நடவடிக்கை எடுக்கும். அப்படி அமெரிக்காவிடம் சிக்கி அழிந்து கொண்டிருப்பவை அரபு நாடுகளே.
தற்போது அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருப்பது கொரிய நாடுகளான வடகொரியா மற்றும் தென்கொரியா.
இந்த இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வருகிறது. இதில் தென்கொரியா அமெரிக்காவிடம் ஆயுதங்கள் வாங்குவதும், கூட்டுப்பயிற்சி செய்வதுமாக இருந்து வருகிறது.
ஆனால், வடகொரியாவோ சீனாவின் உதவியுடன் தாமாகவே அணு ஆயுதங்கள் வரை தயாரித்துக்கொள்கிறது. கடந்த ஆண்டு ஹைட்ரஜன் அணு குண்டு சோதனை நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.
அடிக்கடி ஏவுகனை சோதனையும் செய்து வரும் தென்கொரியா, அவை தோல்வி அடைந்தாலும், விடா முயற்சியாக தொடர்ந்து சோதனை செய்கிறது.
இதனால் டென்சனான அமெரிக்கா, வடகொரியா உலக நாடுகளுக்கு அச்சுருத்தலாக இருக்கிறது என்று தென்கொரியா வாயிலாக அறிவித்து வருகிறது.
வடகொரியாவை எச்சரிக்கும் வகையில் யூஎஸ்எஸ்.கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர்கப்பலையும், யூஎஸ்எஸ்.மிசிகான் என்ற நீர்மூழ்கி கப்பலையும் கொரிய கடற்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
இதற்கு கொஞ்சமும் பயப்படாத வடகொரியா, அமெரிக்க படை வீரர்கள் ஒருவர் கூட தப்பிக்க முடியாது என்று பகிரங்கமாக எச்சரித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பதற்றமான சூழ்நிலையில் அமெரிக்க தூதரக அதிகாரி நிக்கி ஹேலி கூறியிருப்பதாவது:
அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்தி வரும் வடகொரியா, தாங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கமாகும். வடகொரியா மீது போர்புரிவது நோக்கம் அல்ல.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம், உலக நாடுகளை அச்சுருத்தலாம் என்று நினைக்கிறார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement

Post a Comment

 
Top