நேற்றய தினம்(25.04.2017) எமது தொழிலுரிமையை வலியுறுத்தி கிழக்கு மாகாண சபையின் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியிருந்தவேளை அங்கு வருகை தந்திருந்த கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி மற்றும் கிராமிய மின்சார அமைச்சர் ஆரியவதி கலாபதி அவர்கள் கேட்கதகாக தூசண வார்த்தைகளை வேலையற்ற பட்டதாரிகள்மீது தூற்றியதுடன் பட்டதாரிளது.
பிரதிநிதிகள் கிழக்குமாகாண மட்டபத்தில் முதலமச்சருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதும் அவர் அநாகரிக வார்தைகளை பேசி எம்மை களங்கப்படுத்தியமையை வேலையற்ற பட்டதாரிகளாகிய நாங்கள் கண்டிக்கின்றோம்.
எம்மை இழிவுபடுத்தும் வகையில் இனவாத உணர்வுடன் தூசண வார்த்தைகளால் அந்த பெண்மணி வஞ்சிக்கும்போது எம்மை பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த பெண்மணிக்கு ஆதரவு வழங்கும் விதமாக நடந்துகொண்டமை எம் இனத்திற்கே தலைகுனிவாகும்.
Post a Comment