Unknown Unknown Author
Title: வெளிநாட்டு வாழ்க்கையில் கண்ணில் நீர் கசிய வைத்த உண்மைச் சம்பவம் - படித்ததில் வலித்தது...
Author: Unknown
Rating 5 of 5 Des:
துபாயில் தமிழ் ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கே வந்து "சாப்பிட என்ன இருக்கு" எ...

துபாயில் தமிழ் ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கே வந்து "சாப்பிட என்ன இருக்கு" என கேட்டார். அவர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி என்றனர்.இவர் "எவ்வளவு" என கேட்டார். அவர்கள் "சிக்கன் 10 திர்ஹம் மட்டன் 12 திர்ஹம்" என்றனர்.

"சரி சரி அதெல்லாம் வேணாம். எனக்கு ஒரு டீயும், ரெண்டு பரோட்டா மட்டும் கொடு" என்று சொல்லி எனக்கு அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்தார்.
உடனே ஹோட்டல் சர்வர் அவரிடம் "இதையெல்லாம் இங்கே உட்கார்ந்து சாப்பிடக்கூடாது. பார்சல் வாங்கிட்டு போய் வெளியே சாப்பிடுங்க" என்று அனுப்பிவிட்டார்.

எனக்கோ மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு. பாதி சாப்பாட்டோடு வெளியே ஓடி அவரிடம் "அண்ணே உள்ளே வந்து என்கூட உட்கார்ந்து பிரியாணி சாப்பிட வாங்கண்ணே. நா காசு கொடுக்கறேன். பார்க்கவே மனசு கஷ்டமாயிருக்கு" என்று அவரிடம் பலமுறை கெஞ்சுகிறேன்.

ஆனால் அவரோ "தப்பா நெனக்காதீங்க, எனக்கு அடுத்தவங்க காசுல வாங்கி சாப்பிட்டு பழக்கம் இல்லை. எனக்கு 700 திர்ஹம் (12,500 ரூபாய்) தான் சம்பளம் இதுலையே தான் சாப்பிட்டு செலவு பண்ணனும். இவ்வளவு காசு கொடுத்து இங்கே சாப்பிட்டா ஊருக்கு பணம் அனுப்ப முடியாது. இன்னைக்கு வெள்ளிக்கிழமை அசதில தூங்கிட்டதால சமைக்க நேரம் இல்லை. இருக்குற பசிக்கு இதுபோதும்" என்று திட்டவட்டமாக சொல்லிட்டார்.
என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீரோடு திரும்பி ஓட்டல் முதலாளியிடம் இனி இதுபோன்ற செய்யாதீர்கள் என்று என் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
வெளிநாடு வெளிநாடு என்று பல கனவுகளோடு அலையும் இளைஞர்களே இதுதான் #வெளிநாட்டு_வாழ்க்கை.

ருசிக்காக சாப்பிடாமல் பசிக்காக சாப்பிடுபவனே #வெளிநாட்டுவாசி

படித்ததில் வலித்தது...

Advertisement

Post a Comment

 
Top