Unknown Unknown Author
Title: சாலை விபத்திற்கான முதலுதவி.? கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்...
Author: Unknown
Rating 5 of 5 Des:
எம்மில் பலரும் தற்போது சாலைகளில் வேகமாக பயணிக்கிறார்கள். அதிலும் இளைய தலைமுறையினர் தங்களின் வீரதீர சாகசத்தை வெளிப்படுத்துவதற்காக சாலை வித...
எம்மில் பலரும் தற்போது சாலைகளில் வேகமாக பயணிக்கிறார்கள். அதிலும் இளைய தலைமுறையினர் தங்களின் வீரதீர சாகசத்தை வெளிப்படுத்துவதற்காக சாலை விதிகளையோ, போக்குவரத்து விதிகளையோ மதிக்காமல் பயணிக்கிறார்கள். எல்லா தருணமும் நன்மையாக இருப்பதில்லை. எதிர்பாராத தருணங்களில் விபத்து ஏற்பட்டுவிடும். இத்தகைய சமயத்தில் அவர்களை எப்படி முதலுதவிக் கொடுத்து காப்பாற்ற வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். வாய்ப்பு கிடைத்தால் விலைமதிப்பற்ற உயிர்களை தயக்கம் ஏதுமின்றி காத்திடுங்கள்.

விபத்தின்போது தலையில் ஏற்படும் காயமானது ஆபத்தானது.அதிலும் மருத்துவ துறையினரால் இரண்டாவது தலைக் காயம் எனக்குறிப்பிடப்படும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தால் அது மரணத்தைக் கூட ஏற்படுத்திவிடக்கூடும். 
உடனே எம்மில் பலர் இரண்டாவது தலைக்காயமா? அப்படியென்றால்...? என மனதுள்கேட்டுக் கொண்டிருப்பீர். இதன் பொருள் என்னவெனில், விபத்தின்போது தலையில் பலமாக அடிபட்ட சில நிமிடங்களில், மூளையில் ஏற்படும் வேதியியல் மற்றும் உயிரி வேதியியல் (Bio Chemical) மாற்றங்களைத்தான் இரண்டாவது தலைக் காயம் என்று குறிப்பிடுகிறார்கள்.
சுவாசப்பாதை அடைபடுதல், அதிக ரத்தப்போக்கு, நுரையீரல் அடைப்பை ஏற்படுத்தும் வாந்தி போன்றவைகளை இரண்டாவது தலைக்காயம் என்று சொல்லலாம்.
பொதுவாக விபத்தின் போது தலையில் அடிபட்டால், சுயநினைவை இழப்பவர்களின் மூளைக்கு ஓக்சிஜன் செல்வது தடைபடும். 5 நிமிடங்களுக்குள் மருத்துவ உதவி கிடைக்காவிட்டால் உயிருக்கு ஆபத்தாக முடியும். இதனால் விபத்து நடக்கும் காலகட்டத்தில் அருகில் இருப்பவர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அந்த வண்டி வரும் வரை காத்திருக்காமல் எமக்கு முன்னேமேயே சொல்லப்பட்ட முதுலுதவிகளை செய்திடவேண்டும். குறிப்பாக, விபத்தின் போது அடிபட்டவர் சீராக மூச்சு விடுகிறாரா? ரத்தப்போக்கின் அளவு எப்படியிருக்கிறது? என்பதை அவதானித்து அதற்கு ஏற்ப செயல்படவேண்டும்.  
அடிபட்டவரின் நாக்கு உள்ளே மடங்கி சுவாசப் பாதையை அடைத்து, நுரையீரலுக்குச் செல்லும் ஒக்சிஜனைத் தடுத்துவிட்டிருக்கிறதா? என்பதை பரிசோதித்து, அப்படியிருந்தால் உடனே மூளை பாதிப்படையாமல் தடுக்க தலையைப் பின்னோக்கிச் சாய்த்து தாடையை உயர்த்த வேண்டும். அடுத்ததாக இரத்த போக்கு அதிகமாக இருந்தால், அதனை சுத்தமான துணியைக் கொண்டு அவ்விடத்தில் கட்டுப் போடவேண்டும். அதே சமயத்தில் விபத்தின் போது அடிப்பட்டவர் சுயநினைவின்றி இருந்தால், அடிபட்டவரை பக்கவாட்டில் தலை கீழே இருக்குமாறு படுக்க வைக்க வேண்டும். இதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டால் அவர்களிடம் விவரங்களைச் சொல்லிவிடலாம்.
அதற்கு முன் இது போன்ற விபத்திலிருந்து மற்றவர்களைக் காப்பாற்றுவதை விட நாமே இதற்கு ஒரு முன் உதாரணமாக இருக்கவேண்டும். அதாவது சாலை விதிகள், நெடுஞ்சாலை விதிகள், போக்குவரத்து விதிகள் ஆகியவற்றை உறுதியாக கடைபிடிக்கவேண்டும். 
டொக்டர் முரளிதரன்
தொகுப்பு அனுஷா.

Advertisement

Post a Comment

 
Top