ஏராளமானவர்கள் அமர்ந்திருக்கும் அலுவலகத்தில் அலைபேசியில் பேசுவது பேசுபவர்களுக்கும் அருகில் இருப்பவர்களுக்கும் சங்கடமான விஷயம். இதற்காக இருக்கையை விட்டுத் தனியாக ஓரிடம் தேடிச் சென்று பேசிவிட்டு வரவேண்டியிருக்கிறது.
ஒரே நாளில் அடுத்தடுத்து அழைப்புகள் வந்தால் எழுந்து செல்வதும் கடினம். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஹஸ்மி மாஸ்க் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாஸ்க் என்றாலும் இது முகத்தை மூடாது, வாயை மட்டும் மூடும். இதை மாட்டிக்கொண்டு உரையாடினால் அருகில் இருப்பவர்களுக்குக் கூட சிறிதும் கேட்காது.
எந்தவிதத் தயக்கமும் இன்றி உரையாடலாம். போனிலிருந்து ப்ளூடூத் மூலம் காதுகளுக்கு குரல் கடத்தப்படுகிறது.
பல்வேறு நிறங்களில் இந்த ஹஷ்மி மாஸ்க் கிடைக்கிறது. காற்று, அலை, சாரல், பறவைகளின் கூக்குரல் போன்ற பல்வேறு மெல்லிய ஒலிகளோடு உங்கள் குரலும் பயணிக்கும்.
எதிராளிக்கு சுவாரசியத்தை அளிக்கும். ’உலகின் முதல் மொபைல் போன் குரலுக்கான முகமூடி’ இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வருகிறது. இந்திய விலை 13 ஆயிரம் ரூபாய்.
Post a Comment