Unknown Unknown Author
Title: கட்டார் நாட்டு அரசாங்கம் இது போன்ற விடயங்களில் பொடுபோக்காக இருப்பது ஏனோ?
Author: Unknown
Rating 5 of 5 Des:
இஸ்லாமிய சட்டத்தை கடும் தொனியில் கதைக்கும் கட்டார் நாட்டு அரசாங்கம் இது போன்ற விடயங்களில் பொடுபோக்காக இருப்பது ஏனோ? கடந்த சில நா...


இஸ்லாமிய சட்டத்தை கடும் தொனியில் கதைக்கும் கட்டார் நாட்டு அரசாங்கம் இது போன்ற விடயங்களில் பொடுபோக்காக இருப்பது ஏனோ?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்டார் நாட்டில் போதை பொருள் (கஞ்சா) பாவித்த இலங்கையர்களை கைது செய்து அவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அபராதமும் வழங்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே...

அது அப்படி இருக்க புகைத்தலும் ஒரு வகை போதைதான் என்று அவர்களுக்கு தெரியாது போல்.

இன்று எனது நண்பர் வேலைக்கு செல்ல முற்பட்ட போது அவரின் கமராவுக்குள் காட்சியே நீங்கள் கீழே காண்பது.

(சக ஆண்களுடன் ஒரு பெண் புகைப்பிடிக்கும் காட்சி)

இன்றைய உலகின் பாரியசவால்களில் ஒன்றாக புகைத்தல், போதைப் பொருட்பாவனை காணப்படுகின்றது. சிறியவர், பெரியவர், படித்தவர், பாமரர் என்ற பாகுபாடுகளின்றி வயது வித்தியாசமின்றி எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை பல்வேறு சம்பவங்கள் எமக்கு சான்றுபகர்கின்றன.

புகைப்பிடித்தல் : ஹராமா...ஹலாலா..? விவாதிக்க நேரிடுவதை விட “சிகரெட், சிகார், பீடி, சுருட்டு என்று அனைத்து வகைப்புகைத்தலும் ஹராம்!” என்பது இறையச்சம் கொண்ட இஸ்லாமிய உலக அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும். 

சட்டம் தன் கடமையை செய்யும் என்பது போல் அங்கு உள்ள சட்டம் பாவப்பட்டவர்களை சாட்டையாள் அடிக்கின்றது.

எனவே பெண்களாக இருந்தாலும் சரி ஆண்களாக இருந்தாலும் சரி போதை தரும் அனைத்தும் ஹராமே

(وأنفقوا في سبيل الله ولا تلقوا بأيديكم إلى التهلكة واحسنوا ان الله يحب المحسنين)

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள் மேலும் உங்களது கரங்களை நீங்களே அழிவின்பால் கொண்டு செல்லாதீர்கள், மேலும் நன்மை செய்வோரக இருங்கள் அல்லாஹ் நன்மை செய்வோரை நேசிக்கிறான் (அல்குர்ஆன் 2:195)

இந்த ஹதீஸ்கள் கூட கட்டார் முப்திகளுக்கும் பொலீசாருக்கும் விளங்குவதில்லை போல் சவுதியிலும் அப்படித்தான்...

மேலுள்ள திருமறை வசனத்தின் பிரகாரம் பார்க்கும் போது தனக்குரிய புதை குழியை போதைப்பொருள் பாவனையாளர்கள் தாமாகவே தோன்டுகின்றார்கள். தமது கரங்களாலேயே தங்களை அழிக்க முயற்சிக்கிறார்கள். போதைப்பொருள் பாவனை என்பது ஒரு Slow Poison அருந்தும் செயலே தவிரவேறில்லலை.

அல்லாஹ் என்னையும் உங்களையும் பொருந்திக் கொள்ள வேண்டும். நல்லமல்கள் நாளை மறுமையில் நன்மையின் தராசுகளை கனக்கச்செய்யும் தீய செயல்கள் தீமையின் தராசுகளை கனக்கச்செய்யும். நன்மையின் தராசு கனத்து நாம் சுவனத்து சொந்தக்காரர்களாக ஆக பிரார்த்திக்கிறேன்.

Advertisement

Post a Comment

 
Top