முருங்கைகீரையில் கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் A, B, B2, C, பீட்டா கரோட்டீன், மாங்கனீசு, புரதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.
எனவே வாரம் ஒருமுறை முருங்கைக் கீரை மட்டுமின்றி, அதனுடைய பூ மற்றும் காயையும் சமைத்து சாப்பிட்டால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.
முருங்கைக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- முருங்கக்கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தசோகை, சருமப்பிரச்சனை, சுவாசப்பாதை, செரிமான மண்டலம் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
- முருங்கைக் கீரை சாப்பிடுவதால், அது மாதவிடாய் சுழற்சியை சீராக்கி, பெண்கள் வயிற்றில் வளரும் குழந்தையின் உடலில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.
- முருங்கைக்கீரையில் விட்டமின் A அதிகம் இருப்பதால், அது கண் பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுத்து, கூர்மையான கண் பார்வையை ஏற்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- முருங்கைக்கீரையை வாரந்தோறும் உணவில் சேர்த்து வந்தால், அது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, எளிதில் உடலைத் தொற்றும் சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- முருங்கைக்கீரை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது இதயத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதுடன், மாரடைப்பு போன்ற இதர இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைத் தடுக்கிறது.
- முருங்கைக்கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
- முருங்கைக்கீரையில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் வலிமையை அதிகரித்து, தாய்ப்பாலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.
- முருங்கைப் பூவை நன்கு வெயிலில் உலர்த்தி, பொடி செய்து, அதை பாலில் சேர்த்து கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால், சிறுநீரக மண்டலத்தை சீராக்குவதுடன், ஞாபக சத்தியை அதிகரிக்கச் செய்கிறது.
Post a Comment