Unknown Unknown Author
Title: டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?? | டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் | தடுக்கும் வழிமுறைகள் |
Author: Unknown
Rating 5 of 5 Des:
டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்...

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக, திடீரென பாதிப்பை ஏற்படுத்தி, அதிக காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், முட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர் மற்றம் ஏற்படுத்தும். இதில் குறிப்பாக ஜுரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும் மூன்று நோய் அறிகுறி. இதுபோக இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம்.

இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம், கடுமையாக பாதிக்கும்.இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கபடுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வைரஸ் ஒரு வகையால், பாதிக்கபட்டால், அந்த வகை வைரஸுக்கு மட்டும், வாழ்நாள் முழுவதும், நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரஸுக்கு எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை வராது. 

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான முட்டு மற்றும் தசை வழியால் பாதிக்கபடு1வதால், இதற்கு எழும்பு ஒடியும் நோய் BREAKBONE நோய் என்று பெயர். டெங்கு இரத்த கசிதல் நோய் (Dengue hemorrhagic fever) என்பது மிக தீவிரமான தன்மை கொண்டது. உடலில் தோலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்த வடிதல், வாய் ஈருவில் இரத்தம் வருதல்,கருப்பு மலம், இரத்த வாந்தி வரலாம். இந்த வகையான டெங்கு இரத்த கசிவு நோய் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் dengue shock syndrome என்னும் வகைக்கு இறப்பு வரை கொண்டு சென்று விடும்.

Dengue எப்படி பரவுகிறது?
ஏடிஸ் ஈஜிப்டி (Aedes aegypti) என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்க பட்ட ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும்.இந்த கொசு அநேகமாக மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள்,பிளாஸ்டிக் பைகள், கேன்கள்,தேங்காய் செரட்டைகள், டையர்கள், போன்றவற்றில் இனபெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.நோயாளிடம் இருந்து,கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும்.. நோயாளியை தொடுதல், அருகில் இருத்தல் மூலம் பரவாது. 

டெங்கு அறிகுறிகள்:
ஆரம்பதில் குளிர் ஜுரம்,தலைவலி,கண்ணை சுற்றி வலி,முதுகு வலி, பின்னர் கடுமையான கால் மற்றும் முட்டு வலி நோய் வந்து சில மணிநேரத்தில் வரும்.காய்ச்சல் 104 f போகலாம்,. இலேசாக, நாடித்துடிப்பு குறைதல், இரத்த அழுத்தம் குறைதல், .கண்கள், சிவந்து போகலாம்.உடலில் தோலில் சிகப்பு நிற மாற்றம் ஏற்படும்.கழுத்து மற்றும் பிறப்பு உறுப்பு அருகே நெறிகட்டலாம். 

இந்த ஜுரம் மற்றும் மற்ற நோய் அறிகுறிகள் 2 முதல் 4 நாட்கள் வரை இருந்து,பின்னர் திடீரென உடல் வெப்பம் குறைந்து, அதிகமான வியர்வை ஏற்படும். இந்த காலகட்டதில், உடல் வெப்பம் நார்மலாக இருந்த, நல்ல ஆரோக்கியமாக இருப்பது போல் தோன்றும். இந்த காலகட்டம் தான், அநேகர் தாம் நோயிளிருந்து மீண்டுவிட்டோம் என்று இருந்து விடுவர். சில நாட்கள் கழித்து மீண்டும் ஜுரம் மற்றும் தோலில் கலர் மாற்றம் , முகம் தவிர எல்லா பகுதியிலும் தோன்றும். உள்ளங்கை மற்றும் கால் பாதம் சிவந்து தடிக்கலம்.

டெங்கு : எப்படி கண்டுபிடிப்பது?
டெங்கு நோயின் ஆரம்ப கால அறிகுறி, மற்ற வைரஸ் நோய் போல் இருந்தாலும், டெங்கு பரவும் காலகட்டத்தில், இந்த நோய் பரவும் பகுதியில் இருந்தாலோ, அல்லது அந்த பகுதிக்கு போய் வந்தாலோ, , மேல் சொன்ன நோய் அறிகுறி இருந்தால், டெங்கு இருக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதி மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். டாக்டர்கள் பிரத்யோக இரத்த டெஸ்ட் மூலம் இந்த நோயை கண்டு அறிவர்.

டெங்கு-சிகிச்சை முறை
இதற்கு தனியான மாத்திரை மருந்துகள் கிடையாது. காய்ச்சலை குறைக்க சாதாரண பரசெடமால்,போதிய ஒய்வு , நன்றாக நீர் ஆகாரங்கள் உட்கொள்ளுதல் தான் இதற்கு சிகிச்சை..

மருத்துவர் அறிவுரை இல்லாமல் வலி நிவாரினிகள் எடுத்தல் வேண்டாம்
Dengue Hemorrhagic Fever என்னும் டெங்கு இரத்த கசிதல் ஜுரம்:-

இந்த வகையான டெங்குவால் பாதிக்க பட்டவர்களுக்கு வயிற்று வலி, இரத்த கசிவு, மற்றும் ஷாக் என்ற மோசமான உடல்நிலை உருவாகும.இந்த வகை டெங்கு, தொடர்ந்து அதிக ஜுரம், தலைவலி வரும்.இருமல், வாந்தி,குமட்டல், வயிற்று வலி வரலாம்.2 முதல் 6 நாட்கள் கழித்து கை கால்கள் குளிர்ந்து போய், நாடித்துடிப்பு குறைந்து, வாயை சுற்றி நீளமாகி மோசமான நிலைக்கு கொண்டு சென்று விடும். தோலில் இரத்த கசிவு,இரத்த வாந்தி,மலத்தில் இரதம் போய் கருப்பு மலம், பல் ஈரலில் இரத்த கசிவு, மூக்கில் இரத்தம், போன்ற ஏதாவது ஒன்று வரலாம். நிமோனியா வரலாம். இருதயம் பாதிக்கலாம்.

இதற்கு சிகிச்சை, மருத்துவ மனையில் அனுமதித்து, இரத்த குழாய் வழியாக நீர் ஏற்றுதல். இரத்தில் தட்டை அணுக்கள் என்னும் platelet குறைவதால் தான் இரத்த கசிவு ஏற்படுவதால், தொடர்ந்து தட்டை அணுக்கள் அளவை பரிசோதித்து, அது மிகவும் குறைந்தால், இரத்த தட்டை அணுக்க என்னும் Platelet transfusion பண்ண வேண்டும். ஷாக் என்னும் dengue shock syndrome வந்தால், அதற்காக பிளாஸ்மா என்ற வகை இரத்தம் செலுத்த பட வேண்டும்.





டெங்கு தடுக்கும் முறை:-

• வைரஸ் நோயாளிடம் இருந்து கொசு மூலம் பரவும் சுழற்சியை தடுக்க வேண்டும்.அதனால், நோயாளிகள், கொசுவலைக்குள் சுகம் ஆகும் வரை வைக்க வேண்டும்.

• டெங்கு வைரஸை பரப்பும் கொசுவான aedes கொசுவை ஒழிக்க அல்லது கட்டுபடுத்த வேண்டும்.பழைய டயர், தூக்கி வீசிஎரியபட்ட பூச்சாடி,பிளாஸ்டிக் பைகள்,கேன்களில் தண்ணீர் சேராதவரு பார்க்கவேண்டும்,.தேவையற்ற அதுபோன்ற பொருள்களை அகற்றி விடவேண்டும்.

• வீட்டில் உபயோகபடுத்தாத கக்கூஸ்களில், கொசு இனவிருத்தி செய்யும் வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி கழிப்பிடங்களை, அடிக்கடி சுத்தம் செய்து , கழி பீங்கான்களை மூடி வைக்க வேண்டும்.

• தண்ணீர் கஷ்ட காலங்களில், தண்ணீரை பாத்திரங்களில் மூடி வைக்கும் நிலை ஏற்பட்டால், இரண்டு நாளுக்கு மேல் பார்த்து கொள்ளவேண்டும். அதை நன்றாக மூடி, கொசு அண்டவிடாமல் பார்த்து கொள்ளவேண்டும். பொதுவாக இந்த கொசுவின் வாழ்கை சுழற்சி ஏழு நாள் ஆதலால், எந்த தேங்கும் சுத்தமான நீரும் ஏழு நாளை தாண்டினால், அது கொசு இனபெருக்கம் செய்து தனது வழக்கை சுழற்சியை முடித்து பரவ எதுவாக அமைந்து விடும்.

• நீர் தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீட் AC, FRIDGE மூலம் வெளியாகும் தண்ணீர் தேங்கமல் அவாபோது நீக்கி விடவேண்டும்.

• கொசு கடிக்காமல், கை கால் களைநன்றாக மூடி வைக்க வேண்டும். கொசுவலைகளை பயன்படுத்தலாம்,.. வீட்டு கதவு ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்து கொசு அண்டாமல் பார்த்து கொள்ளலாம். கொசுவை விரட்டும் புகைகள் உபயோகபடுத்தலாம்.. ஆனால் சிலருக்கு இது சுவாச அலர்ஜி ஏற்படுத்தலாம்.

• உடலில் தேய்க்கும் கொசு ஒலிப்பான் மருந்தான deet உபயோகபடுத்தலாம். அனால் தோல் அலர்ஜி இது உண்டு பண்ணலாம்.

• இந்த கொசு பகல் நேரத்தில் அதிகம் குறிப்பாக சூரியன் உதிக்கும் மற்றும் மறையும் நேரத்தில் அதிகம் கடிக்கும் .

• அரசு மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம், கொசு விரட்டும் புகை மற்றும் மருந்து தெளிப்பது மூலம் கொசுவை ஒழிக்கலாம் 

• நீர் சேர்ந்து இருக்கும் இடங்களில், கொசுவின் லார்வா வை ஒழிக்கும் மருந்துகளை அடிப்பதன் மூலம், கொசுவின் வாழ்க்கை சுழற்சி லார்வாவிலே நிறுத்தப்பட்டு, முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக மாறாமல் தடுக்கலாம்.

• சுருங்க சொன்னால், கொசுவை ஒழிப்பதன் மூலமும், கொசு கடிக்காமல் பார்பதன் மூலமே இதை தடுக்க ஒழிக்க முடிம்யும்.

Advertisement

Post a Comment

 
Top