Unknown Unknown Author
Title: உலகே வியக்கும்படியான ஒரு காதல் கதை
Author: Unknown
Rating 5 of 5 Des:
மூக்கும், முழியும் இல்லை தான், ஆனால் காதல் இதயம் முழுக்க இருக்கு… அழகை மட்டுமின்றி, காதலையும் சேர்த்து வென்ற ஒரு அற்புத காதலர்களை பற்றி...

மூக்கும், முழியும் இல்லை தான், ஆனால் காதல் இதயம் முழுக்க இருக்கு… அழகை மட்டுமின்றி, காதலையும் சேர்த்து வென்ற ஒரு அற்புத காதலர்களை பற்றி..
காதலுக்கு கண்ணில்லை என்பார்களே, அது உண்மை தான். உண்மையான காதல் அழகையோ, உடல் உருவத்தையோ வைத்து வருவதில்லை. காதல் இரு மனதின் புரிதல், இணைதலின் பிள்ளையாய் பிறக்கும் ஜீவநதி. அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கின்றனர் இந்த அற்புத தம்பதியினர்.
திருமணம் பார்க்க ஆரம்பித்தாலே பெண் மூக்கும் முழியுமாக இருக்க வேண்டும் என்று தான் எதிர்பார்ப்பார்கள். ஆனால், க்சூவுக்கு (29 வயது பெண்) அது இரண்டுமே குறையாகிப்போனது. ஆனால், இவருக்கான துணை உலகிற்கு ஒரு உதாரணமாக திகழ்வார் என இப்பெண் அந்நாளில் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவே…
எதிர்பாராத விபத்து!
க்சூ பிறந்து ஒரு மாதம் தான் இருக்கும். இவரது தாய் இவரை ஒரு கூடையில் பத்திரமாக படுக்க வைத்து வேலைக்கு சென்றுவிட்டார். க்சூவின் அக்கா சிறிது நேரத்திலேயே தாயை காண ஓடோடி சென்றார். அதற்கான காரணம் ஒரு எலி க்சூவின் மூக்கை கடித்து விட்டது.

கேலி, கிண்டல்!
மிகவும் கோரமான விபத்தால் ஒரு மாத குழந்தையாக இருக்கும் போதே முக அழகை இழந்தார் க்சூ. ஆனால், இந்த சமூகம் இவருக்கு இதை விட கொடுமையான வலியை கேலி, கிண்டல்கள் மூலமாக கொடுத்தது. மிகந்த ஏளன செயல்களால் ஆறாம் வகுப்போடு பள்ளியை விட்டு வெளியேறினார் க்சூ. தனது 17 வயதில் முதல் வேலையில் சேர்ந்தார். அங்கும் இதே கேலி, கிண்டல் தொடர்ந்தது.

திருமணம்!
18 வயதில் க்சூவுக்கு திருமணம் நடந்தது. இவரை விட எட்டு வயது மூத்த நபரை திருமணம் செய்துக் கொண்டார் க்சூ. ஆனால், இந்த திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையவில்லை. இரண்டே வருடத்தில் விவாகரத்தானது. கணவர் வீட்டார் க்சூவின் முக தோற்றத்தை வைத்து திட்டிக் கொண்டே இருந்தது தான் பிரிவின் காரணமாக அமைந்தது.

தடைகளை தகர்த்து வளர்ந்தார்!
அனைவராலும் நிராகரிக்கப்பட்டு வந்த க்சூ மனமுடைந்து போனார். வெளியிலகுடன் தொடர்புக் கொள்ள க்சூவுக்கு இருந்த ஒரே வழி இனையதளம் தான்.

லின்!
சமூக ஊடகத்தின் வழியாக தான் தன்னுடைய துணையான லினை கண்டார் க்சூ. முதலில் தனது முகத்தை லினுக்கு காட்ட விரும்பவில்லை க்சூ. பிறகு வெளிப்படையாக இதை கூற வேண்டும், மறைக்க கூடாது என்பதால், தனக்கு மூக்கு இல்லை என கூறினார். ஏற்கனவே, க்சூவின் நம்பிக்கை, நல்ல குணம் போன்றவற்றால் ஈர்ப்புக் கொண்ட லின் க்சூவை முழுமனதுடன் ஏற்றுகக் கொண்டார்.

காதல் மலர்ந்தது!
முதல் முறையாக தனது உருவத்தை ஏற்று உண்மையான அன்பை வெளிக்காட்டும் நபராக கண்முன் திகழ்ந்தார் லின். முதல் முறை நேரில் பார்த்துக் கொண்ட ஒரே மாதத்தில் திருமணம் செய்துக் கொண்டனர் க்சூவும். லினும்.

கடுமை!
லின் தனது குடும்பத்தாரை ஒத்துக்கொள்ள வைக்க சற்றே கடுமையாக போராடினார். அனைத்தையும் கடந்து முழு மனதுடன், இதயம் முழுக்க காதல் நிறைத்து இருவரும் இல்லற உறவில் இணைந்தனர்!

Advertisement

Post a Comment

 
Top