கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை தான் வன்மையாக கண்டிப்பதாக ரவிகருணாநாயக்க தெரிவித்தார்.
இது பற்றி கொழும்பு வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவிக்கையில், தேர்தல் தொடர்பான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், கறுப்பு நிற ஹைபிரிட் கார் ஒன்றில் வந்த துப்பாக்கிதாரிகள் சராமரியாக சுட்டனர் என்றார்.
திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இச்செயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாகவும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் என்ற வகையில் தேர்தல் தொடர்பான சட்டங்களை மீறுவோருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின்போது சித்தி நசீமா (சித்தி பரீதா) எனும் 42 வயதான கொட்டாஞ்சேனை, மாதம்பிட்டியவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
இதில் பெண் ஒருவர் உட்பட மற்றும் இருவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்திருந்தார். இவர்களில் ஒருவர் இறந்துள்ளார்.
Post a Comment