பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களின் மீது வாக்கியங்களை எழுதுதல் அல்லது புகைப்படத்தில் மாற்றங்கள் செய்தல் போன்ற வசதிகளை சில ஐ.ஓ.எஸ். பயனாளர்களிடம் பரிசோதித்து வருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தை கொண்டுள்ள பயனாளர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் போது செங்குத்தான கோடு ஒன்று தோன்றும். அதை தள்ளும்போது கறுப்பு-வெள்ளை, பிரைட் போன்ற பல்வேறு கலர் கரெக்ஷன் மற்றும் பில்டர் செய்வதற்கான வசதிகள் தோன்றும்.
அதேபோல் புகைப்படத்தின் மேல் வாசகங்களை எழுதும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வசதி கிடைக்கப்பெற்ற சிலர் தங்கள் புகைப்படங்களை எடிட் செய்து வெளியிட்டு வருகிறார்கள்.
ஸ்னாப்சாட் போன்று ஒரு சேவையை பேஸ்புக்கில் கொண்டுவர அந்த நிறுவனம் சில முறை முயற்சி செய்தது. ஆனால் அவை பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்த முறை ஸ்னாப்சாட் போன்ற வசதியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டது என்றுதான் கூறவேண்டும். விரைவில் இந்த வசதி அனைத்து போன்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
Post a Comment