1.இன்றைய முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாக்களை சுன்னத்துத்தானே என எண்ணி அமல் செய்கிறார்கள். ஆனால் சஹாபாக்கள் அவற்றை பர்ளுடைய அந்தஸ்த்தில் வைத்து அமல் செய்தார்கள்.
2.இன்றைய முஸ்லிம்கள் மக்ருஹான விடயங்களை அலட்டிக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால் சஹாபாக்கள் அதனை ஹறாம் எனும் அந்தஸ்தில் அமுல்படுத்தினார்கள்.
3.இன்றைய முஸ்லிம்கள் ஹலால் ஹறாம் என்பதில் பாரிய அக்கறை செலுத்துவதில்லை. ஆனால் ஹறாம் ஹலால்தான் அவர்களின் வாழ்வின் அடிப்படையாக என்றும் மிளிர்ந்தது.
4.இன்றைய முஸ்லிம்கள் சுவர்க்கத்தை ஆசிப்பதனைவிட உலகினை அதிகம் ஆசிக்கிறார்கள். நரகத்திற்கு அஞ்சுவதில்லை. மறுமையினது கேள்வி கணக்கை உதாசீனம் செய்த நிலையில் மனம்போன போக்கில் வாழ்கிறார்கள். ஆனால் சஹாபாக்களோ சுவர்கத்தை கண்முனே நிறுத்தி அதன் இன்பங்களை ஆசித்து அதனை அடைய முயற்சித்தார்கள். அத்துடன் நரகத்தை கடுமையாக அஞ்சிய படி தமது அனைத்து காரியங்களையும் ஒழுங்குபடுத்தினார்கள்.
தமது ஒவ்வொரு செயலுக்கும் மறுமையில் பதில் சொல்லவேண்டிவரும் என்பதனை எல்லாச் சந்தர்ப்பத்திலும் உணர்ந்து வாழ்வை ஒழுங்குபடுத்தினார்கள்.
இவை யாவற்றிற்கும் காரணமாக உத்தம சஹாபாக்களது இஸ்லாமிய அகீதாவின் உறுதியும் தெளிவும் இருந்தது. ஆனால் இன்றைய முஸ்லிம்களது அகீதா மேற்கினது அகிதாவில் கட்டியெழுப்பப்பட்ட சிந்தனைகளான “மதஒதுக்கல் சிந்தனை, தாராண்மைவாதச் சிந்தனை, ஜனநாயகம், முதலாளித்துவம்” போன்ற குப்பரிய சிந்தனைத் தாக்கத்திற்கு உட்பட்டு தமது வாழ்வின் இலக்கும் இஸ்லாம்பற்றி தெளிவும் இல்லாத நிலையில் வாழ்கிறார்கள்.
எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்
www.facebook.com/arrambam1
Post a Comment