https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: ஜக்காத் யாருக்கு கொடுக்க வேண்டும்?
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான். அல்லாஹ் கூறுகிறான்:...




அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே யார் யாரெல்லாம் ஜக்காத் பெற தகுதியுடையோர் என பட்டியலிட்டு எட்டு வகையினரைக் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: –

(ஜகாத் என்னும்) தானங்கள்


1.தரித்திரர்களுக்கும்,

2.ஏழைகளுக்கும்,

3.தானத்தை(ஜக்காத்) வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,

4.இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்,

5.அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,

6.கடன் பட்டிருப்பவர்களுக்கும்,

7.அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்),

8.வழிப்போக்கர்களுக்குமே உரியவை.

(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் – அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்-குர்ஆன் 9:60)

ஜக்காத் செல்வந்தர்கள் செலுத்தும் கட்டாய வரி ;
***************************************************************

1.இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஜக்காத் கொடுப்பதும் ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்திக் கூறும் பெரும்பாலான இடங்களில் எல்லாம் இந்த ஜக்காத்தைப் பற்றியும் மிக மிக வலியுறத்திக் கூறியிருக்கிறான்.
2.அபூபக்கர் ஸித்திக் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஜக்காத் கொடுக்க மறுத்த கூட்டத்தினரோடு யுத்தப் பிரகடனம் செய்கின்ற அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ஜக்காத் விளங்குகிறது. எனவே நாம் ஜக்காத்தை ஒவ்வொரு ஆண்டும் முறைப்படி கணக்கிட்டு கொடுத்து வருவது அவசியமாகும்.

3.இந்த எட்டு வகையினருக்கு மட்டும் தரப்படுவது ஜக்காத் ஆகும் .
மற்ற காரியங்களுக்கு செலவிடப்படும் தர்மம் சதக்கா ஆகும்

4.ஜக்காத் செல்வந்தர்கள் கட்டாயம் செலுத்தப்படும் வரி ஆகும் .

அது ஏழைகளுக்கு போடப்படும் பிச்சை அல்ல.

Advertisement

Post a Comment

 
Top