அமைச்சர் ராஜித சேனாரத்ன மறைந்த தலைவர் அஷ்ரஃப் அவர்களுக்கெதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டுவந்ததன் மூலம் முஸ்லிம் சமூகத்துக்கெதிரான தனது குரோத மனப்பான்மையை அன்றே பகிரங்கப்படுத்தியவர் என்பது நாடறிந்த விடயம்.
அதன் தொடர்ச்சியாகவே இன்று தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கெதிராகவும் ஒரு புத்தி பேதலித்தவன் போல அரசியல் நாகரீகமற்ற முறையில் முழு முஸ்லிம்களுடைய மதநம்பிக்கைகளையும் இழிவுபடுத்தும் விதமாக உளறியதன் மூலம் தான் ஒரு வடிகட்டிய இனவாதி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார்.
நல்லாட்சிக்குள் ஒளிந்திருக்கும் சில நச்சுப்பாம்புகள் இப்போது படமெடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
அமைச்சர் ராஜித சேனாரத்னவைப் போன்ற இனவாதிகள் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கெதிராக எதுவுமே பேசவில்லை என்றால்தான் தலைவர் ஹக்கீம் முஸ்லிம் சமூகத்துக்கான தனது கடமையைச் செய்யாமல் தனது பதவியைப் பாதுகாப்பதற்காக பொத்திக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
இனவாதிகள் சகித்துக்கொண்டிருக்க முடியாமல் தலைவர் ஹக்கீமுக்கெதிராக பொங்கி எழுகிறார்கள் என்றால் தலைவர் ஹக்கீம் பதவிகளை துச்சமென மதித்து சமூகத்துக்கான தனது பணிகளை செய்துகொண்டிருக்கிறார் என்று நாம் நிச்சயமாக ஆறுதலடைய முடியும்.ஏனென்றால் சிறுபான்மைகள் பயன் பெறுவதை பேரினவாதம் ஒருபோதும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டாது.
வில்பத்து விவகாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கருத்தையும், 20வது திருத்தச் சட்டம் தொடர்பில் ராஜித சேனாரத்ன உட்பட இன்னும் சில அமைச்சர்களின் நிலைப்பாட்டையும் உன்னிப்பாக அவதானிக்கின்ற போது நல்லாட்சியிலும் முஸ்லிம்களின் எதிர்காலம் நம்பிக்கையூட்டுவதாக அமையப்போவதில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.
Post a Comment