https://arambam1.blogspot.com/ https://arambam1.blogspot.com/ Author
Title: அலுத்கம , தர்ஹாடவுன் வன்முறைக்கு காரணமாவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை : அமெரிக்கா
Author: https://arambam1.blogspot.com/
Rating 5 of 5 Des:
 இலங்கையில் -அலுத்கம , பேருவளை ,தர்ஹாடவுன் வன்முறைக்கு காரணமானவர்கள் எவரும் அதற்கு பொறுப்பு கூறும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...


 இலங்கையில் -அலுத்கம , பேருவளை ,தர்ஹாடவுன் வன்முறைக்கு காரணமானவர்கள் எவரும் அதற்கு பொறுப்பு கூறும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப் REPORTபடவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது .
தற்போது வெளியிடப்பட்டுள்ள ,சர்வதேச நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான  2014 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்க திணைக்கள அறிக்கையில் மேற்படி குறிப்பிட்டப்பட்டுள்ளது
அலுத்கம , பேருவளை ,தர்ஹாடவுன் வன்முறையின் போது அங்கு பொலிசாரும் விசேட அதிரடிப் படையினரும் அனுப்பட்டபோதும் பெரும்பாலும் அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்படுவதையும் , நபர்கள் தாக்கப்படுவதையும் பார்த்துகொண்டு இருந்ததாக முறைபாடுகள் செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது ,
கடந்த ஆண்டு வன்முறையின் பின்னர் (முன்னாள் )ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது நிர்வாகம்,  சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்ளும் என அறிவித்திருந்தார் எனினும்  2014 ஆண்டு இறுதி வரை விசாரணை தொடர்பான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .
பொது பல சேனாவுடன் செயல்படும் பெளத்த தேரர்களினால் தூண்டிவிடப்பட்ட வன்முறையின்போது முஸ்லிம்களின் வீடுகள் , வர்த்தக நிலையங்கள் , மஸ்ஜித்துக்கள் மீதான தாக்குதல்கள் சிங்கள பௌத்தர்களினால் மேற்கொள்ளப்பட்டது  அதில் மூவர் கொல்லப்பட்டனர் , அதிகமானவர்கள் காயமடைந்தனர் எனவும்  இடம்பெற்ற வன்முறை தொடர்பில் 60க்கும்  அதிகமானோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டதாக அறிவிக்கப்பட்டது எனினும் கடந்த ஆண்டு இறுதியின் போது தாக்குதலில் தொடர்பு பட்டமைக்காக எவரும் தடுத்து வைக்கப் பட்டுள்ளனரா ? என்பது தெளிவற்றதாக உள்ளது , வன்முறைக்கு காரணமானவர்கள் எவரும் அதற்கு பொறுப்பு கூறும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியிடப் படவில்லை என அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது .
அதேவேளை புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னரும் வன்முறைக்கு காரணமானவர்கள் என குற்றம் சாட்டப்படும் நபர்கள் சுதந்திரமாக நடமாடுவதுடன் மேலும் பல புதிய பிரச்சினைகளை தூண்ட முயன்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
Persistent reports of government ties to hard-line nationalist Buddhist groups, in particular the BBS, continued to appear. In June widespread riots erupted in Aluthgama, Beruwela, and Dharga Town in Western Province after an altercation involving a Buddhist monk and a Muslim boy on June 12. Details over the origins of the altercation remained disputed, but following the incident there was a series of attacks against Muslim homes, businesses, and places of worship by mobs of mostly Sinhalese Buddhists, incited by Buddhist monks associated with the BBS. At a June 15 rally in Aluthgama, BBS general secretary Galagoda-Atte Gnanasara Thera stated that, if a non-Sinhalese person touched a Sinhalese person, then “it will be their end.” During the riots that spread beyond the three towns, at least three persons were killed and scores more were injured. Authorities dispatched police and special task force (STF) officers to the areas affected by the violence, but witnesses complained they often looked on as the mobs destroyed property and attacked individuals. Authorities reportedly detained more than 60 individuals connected to the attacks, although by year’s end, it was unclear if anyone remained detained as a result of their participation in the attacks. There were no reports of any perpetrators held accountable for participation in the attacks. President Rajapaksa, who was traveling abroad when the attacks occurred, visited the attack sites on June 18. During the visit he tweeted that his administration would “conduct an impartial inquiry” into the events. The government had not released any inquiry results as of year’s end.
குறித்த அறிக்கைகை முழுமையாக பார்க்க
Country Reports on Human Rights Practices for 2014

Advertisement

Post a Comment

 
Top